அந்த படத்தின் போதே அஜித்துக்கும் வடிவேலுக்கும் பிரச்சனை. ராஜா படத்தின் இயக்குனர் சொன்ன சீக்ரட்.

0
37605
ajith vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய், சிம்ரன் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் திரைப்பட இயக்குனராக அறிமுகமானர். இவர் இயக்கிய முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், வசூலையும் பெற்றார். இதனை தொடர்ந்து இவர் பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா என பல படங்களை இயக்கி உள்ளார். இவருடைய இயக்கத்தில் இந்த வருடம் ஜகஜால கில்லாடி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் எழில் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் ஒருவர் தல அஜித்துக்கும், வடிவேலுக்கும் இடையே என்ன பிரச்சனை? அவர்கள் இருவரும் நீங்கள் இயக்கிய ராஜா படத்திற்கு பிறகு நடிக்கவில்லையே என்ன காரணம்? இது குறித்து உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டு உள்ளார். அதற்கு இயக்குனர் எழில் அவர்கள் கூறியது, வெளியில் எல்லோரும் அப்படித் தான் பேசுகிறார்கள். ஆனால், எனக்கு எதுவும் பெரிய பிரச்சினை மாதிரி தெரியல. இவர்களுக்குள் பெரிய பிரச்சனை, சண்டை நடந்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லை.

இதையும் பாருங்க : இமைக்கா நொடிகள் வில்லனுடன் விவாகரத்து. தற்போது திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்ற நடிகை.

-விளம்பரம்-

அஜித்,வடிவேலுக்கு இடையே சின்ன சின்ன மனவருத்தங்கள் இருக்கலாம். ராஜா படத்தின் படப்பிடிப்பின் போதே இவர்களுக்குள் பிரச்சனை மாதிரி சொல்லிக் கொண்டார்கள். நான் அப்ப என்னுடைய படம் முடிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தேன். என்னுடைய கவனம் முழுவதும் ஸ்கிரிப்டில் இருந்ததால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் படம் முடிந்த முடித்த பிறகு தான் இவர்கள் இருவருக்கும் மன வருத்தங்கள் இருக்கிறது என்று தெரிய வந்தது. ஆனால், என்ன காரணம் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. அதோட எல்லாரும் சொல்லிக்கிற மாதிரி பெரிய சண்டையோ, பிரச்சனை எதுவும் நடக்கவில்லை. அவர்களுக்குள் சின்ன மனஸ்தாபம் இருக்கும். ஆனால், இதை சமூக வலைத்தளங்களில் தான் பெருசாக கொண்டு செல்கிறார்கள் என்று கூறினார்.

வீடியோவில் 18:20 நிமிடத்தில் பார்க்கவும்

தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அஜித் அவர்கள் 18 ஆண்டுகளாக வடிவேலுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து விட்டார். மேலும், கடந்த 18 வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. தல அஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு இணைந்து நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது எனினும் படக்குழுவினர் வடிவேல் இந்த படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement