இமைக்கா நொடிகள் வில்லனுடன் விவாகரத்து. தற்போது திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்ற நடிகை.

0
5451
anurang
- Advertisement -

கடந்த ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக அசத்தியவர் அனுரங் கஷ்யப். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து செய்து கொண்டனர். நடிகை கல்கி கோச்லின் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் பாண்டிச்சேரியில் தான். இவர் பிரஞ்ச் பெண். பாலிவுட் திரையுலகில் நடிகை, நாடகக் கலைஞர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர் நடிகை கல்கி கோச்லின். இவர் இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for anurag kashyap wife

- Advertisement -

இவருக்கு தமிழ் நன்றாக தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்று இவர் பலமுறை கூறியிருந்தார். இதையடுத்து நடிகை கல்கி கோச்லின் அவர்கள் தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.நடிகை கல்கி கோச்லின் அவர்கள் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரர், நடிகரான அனுராக் காஷ்யப்பை 2011ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

பின் இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். மேலும், இவர் வெப் தொடர்களிலும் நடிக்கிறார். விவாகரத்துக்குப் பிறகு நடிகை கல்கி கோச்லின் அவர்கள் தனியாக தான் வாழ்ந்து வந்தார். பின் இவர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். அதோடு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம் என்று கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-
Image result for Kalki Koechlin

இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை கல்கி கோச்லின் அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்து இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன் உடைய கர்ப்பமான வயிற்று புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை கல்கி கோச்லினுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதே போல் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த எமிஜாக்சனும் தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து கர்ப்பமாகி பின் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதே போல் தற்போது நடிகை கல்கி அவர்களும் பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். தற்போது வரும் நவீன காலத்திற்கு இவர்கள் இந்த அளவிற்கு மாடர்ன் ஆக மாற வேண்டிய அவசியமில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement