-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மணிரத்தினம் படத்திற்கு ‘நோ’ சொன்ன மோகன், காரணம் என்ன? எந்த படம்னு தெரியுமா?

0
70

பிரபல நடிகர் மோகன், இயக்குனர் மணிரத்தினத்தின் படத்தில் நடிக்க மறுத்த செய்தி தான் இப்போது வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் 80, 90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். இவரது நடிப்பின் மூலம் தனக்கு என்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டுக் கொண்டு நடித்தார்.

-விளம்பரம்-

இவரை எல்லோரும் ‘மைக் மோகன்’ என்று தான் அழைப்பார்கள். இவர் ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேயே நேரத்தை செலவிட்டார். மேலும், மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடுமென்று எல்லோரும் பேசுவார்கள். இப்படி எல்லா விதத்திலும் சிறந்து விளங்கிய மோகன் ஒரு நடிகை அவரை பற்றி பொய்யாக சொன்ன வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதை மாறிவிட்டது. தற்போது தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகள் கழித்து ‘ஹரா’ படத்தின் மூலம் மோகன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

மோகன்- மணிரத்தினம்:

நடிகர் மோகனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குனர்களின் மணிரத்னமும் ஒருவர். அவர் இயக்கத்தில் மோகன் நடித்த ‘மௌன ராகம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. காலங்கள் கடந்தும் இன்றளவும் கொண்டாடப்படும் படம் அது. அத்தகைய சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு இந்த காம்போ, மறுபடியும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நழுவ விட்டது என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

வாய்ப்பை மறுத்த மோகன்:

-விளம்பரம்-

அதாவது ‘மௌன ராகம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினம், மோகன் மற்றும் ரேவதி ஜோடியை வைத்து இயக்க நினைத்த திரைப்படம் தான் ‘அஞ்சலி’. அந்தப் படத்தில் அவர்களுக்கு குழந்தை இருக்கும்படி திரைக்கதை அமைத்து, அதை மோகனிடம் சொல்லி இருக்கிறார் மணிரத்தினம். ஆனால், அந்தக் கதையில் மோகனுக்கு உடன்பாடு இல்லாததால், அதில் நடிக்க மறுத்து விட்டாராம்.

-விளம்பரம்-

பல விருதுகள் வாங்கிய ‘அஞ்சலி’:

மேலும், அஞ்சலி படத்தில் ஸ்பெஷல் சைலண்டாக ஷாமிலி நடித்திருந்தார். அந்த குழந்தையை தனி அறையில் வைப்பது போன்ற காட்சிகள் அந்த படத்தில் அமைந்ததால், நடிகர் மோகனுக்கு அதில் நடிக்க உடன்பாடு இல்லையாம். அதனைத் தொடர்ந்து தான் நடிகர் ரகுவரனை அஞ்சலி படத்தில் கமிட் செய்திருக்கிறார் மணிரத்தினம். அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு என்ற மூன்று தேசிய விருதுகளை வென்றது நாம் அனைவரும் அறிவோம்.

மோகனின் பிரேக்:

ஒரு காலகட்டத்தில் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கு காரணம் எய்ட்ஸ் நோய் தான் என்று வதந்திகள் வந்தன. ஆனால் சமீபத்தில் தனக்கு அப்படி ஒரு நோய் இல்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் மோகன். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது என்று தெரிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news