90ஸ் ரசிகர்களின் Nostalgic : மறு ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா ?

0
1953
- Advertisement -

மறு ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விவரங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை பார்க்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி திகழ்கிறது.

- Advertisement -

சன் டிவி சீரியல் :

அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களை மீண்டும் சேனல்களில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆயிரம் எபிசோட்களை கடந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த தொடர்களை தான் மறுஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கோலங்கள், நாதஸ்வரம், தெய்வமகள் , தென்றல், அழகி போன்ற பல தொடர்களை தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு மறுஒளிபரப்பாகி வருகிறது.

மறுஒளிபரப்பு சீரியல்கள்:

இவை அனைத்தும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தவை. தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக கோலங்கள், தெய்வமகள், தென்றல் ஆகிய தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு இந்த சீரியல்கள் எல்லாம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது. தற்போது கலைஞர் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் டிஆர்பி:

இந்த நிலையில் மறு ஒளிபரப்பு செய்து வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியலில் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியல் 1.12 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதை அடுத்து திரு செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியல் 0.54 டிஆர்பி புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. பின் வி சி ரவி இயக்கத்தில் வெளிவந்த அழகி தொடர் 0.47. டிஆர்பி புள்ளிகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது.

மறுஒளிபரப்பு ரேட்டிங்க்:

எஸ் குமரன் இயக்கிய தெய்வமகள் சீரியல் 0.23 டிஆர்பி புள்ளிகளையும், எஸ் குமரன் இயக்கிய தென்றல் தொடர் 0.43 டிஆர்பி புள்ளிகளையும் பிடித்து இருக்கிறது. அதேபோல் இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, நாதஸ்வரம் தொடர்களும் மறுஒளிபரப்பு செய்திருந்தார்கள். சமீபத்தில் தான் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement