கோலாகலமாக நடந்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு – குவிந்த சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள்

0
123
- Advertisement -

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவுக்கு வளைகாப்பு நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைஞராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது. இதன் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடைசியாக ரெடின் கிங்ஸ்லி அவர்கள் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த ஸ்வீட் ஹார்ட் படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

ரெடின் கிங்ஸ்லி திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் மாஸ்டர் பட நடிகையை இவர் திடீர் திருமணம் செய்து கொண்டார். அவர் வேற யாரும் இல்லை, சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான் சங்கீதா. இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராக மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தில் இவர் சில நிமிடம் நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

சங்கீதா திரைப்பயணம்:

இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இவர் சீரியலில் நடித்து இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் மைசூரில் உள்ள ஒரு படப்பிடிப்பில் நடந்தது. இந்த திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படி திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

சங்கீதா கர்ப்பம்:

அதோடு இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் வந்தது. இருந்தாலும், அதை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை. இதை அடுத்து சமீபத்தில் கிங்ஸிலியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதனால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகி விட்டார். பின் சங்கீதா, கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லி மனைவியின் வளைகாப்பு புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சங்கீதா வளைக்காப்பு:

அதாவது, ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில்தான் இந்த வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதில் ஏராளமான சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சங்கீதாவை வாழ்த்தி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement