கைவிட்ட இரண்டு கணவர்கள், பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை – சத்தமில்லாமல் விஷால் செய்துள்ள உதவி.

0
1195
Sharmila
- Advertisement -

என் மகனுக்கு ஆறு வருடங்களாக விஷால் தான் ஸ்கூல் பீஸ் கட்டுகிறார் என்று நடிகை சார்மிளா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் ஷர்மிளா. இவர் மலையாள மொழியின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். நான்கு வயதில் இருந்தே இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் தமிழிலும் இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், கதாநாயகியாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பிற மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் இடையில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஆனால், சில வருடங்கள் இவர் நடிக்காமல் இருந்தார். மீண்டும் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : வாழ்க்கை தருவான்னு நம்பினேன், அவன் என்னை ஏமாற்றிவிட்டான். என் நகைகளை கூட குடுக்கவில்லை – இறப்பிற்கு முன் சில்க் ஸ்மிதா எழுதிய கடைசி கடிதம்.

சர்மிளா திரைப்பயணம்:

அந்த படத்தில் சர்மிளா அவர்கள் கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும், கௌதம் மேனன் இயக்கிய முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதையில் ஜெயலலிதாவின் பதின்ம பருவ கால பாட்டியாக நடித்து இருந்தார் சர்மிளா. அதன் பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. சமீபத்தில் இவர் அரசு மருத்துவமனையில் உதவிக்கு யாரும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற தகவல் மட்டும் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

சர்மிளா அளித்த பேட்டி:

தற்போது நடிகை ஷர்மிலா தொலைக்காட்சித் தொடர்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் நடிகை சார்மிளா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், தனக்கு மூன்று திருமணமானது குறித்தும், திருமணத்தால் பல ஏமாற்றங்களை கண்டதாகவும் தற்போது தனிமையில் கஷ்டப்பட்டு இருப்பதாக கூறியிருந்தார். இவர் 90களின் வில்லன் நடிகர் பாபு ஆண்டனி உடன் ரிலேஷன்ஷிப் இருந்தார்.

ஷர்மிளாவின் திருமணம் குறித்த தகவல்:

அதற்குப் பின் நடிகர் கிஷோர் சத்யாவை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது தன்னுடைய மகனுடன் சர்மிளா தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சர்மிளா மகனின் பள்ளி செலவை நடிகர் விஷால் தான் செய்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஷால் செய்த உதவி:

அதாவது, சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சர்மிளா அவர்கள் தன்னுடைய மகனுக்கு ஆறு ஆண்டுகளாக விஷால் தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகிறார். உங்களையும் உங்கள் மகனையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று விஷால் மெசேஜ் மட்டும் தான் செய்வார். அவர் என் மகனுக்கு மட்டும் இல்லாமல் நிறைய குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்துவருகிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement