இயக்குனர் முருதாதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் கதை திருடப்பட்ட கதை என்று இயக்குனர் வருண் ராஜேந்தர் என்பவர் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திடமும், உயர் நீதி மன்றத்திடமும் புகார் அளித்திருந்தார்.

Advertisement

உயர் நீதி மன்றத்தில் இந்த புகாரை விசாரித்த நீதிபதிகள் இயக்குனர் முருகதாசிற்கு சாதகமாக தீர்ப்பளித்துஇருந்தனர். ஆனால், எழுத்தாளர் சங்கத்தில் சர்க்காரின் கதை இயக்குனர் வருண் ராஜேந்தரியனுடையது தான் என்றும் அதனை முருகதாஸ் திருடிவிட்டார் என்றும் உறுதிப்படுத்தியது. இதனை நடிகர் பாக்கியராஜும் உறுதிப்படுத்தி இருந்தார்.

வருண் ராஜேந்திரன், உங்களை நேர்காணல் காண நான் தயார். உங்களின் கதையை நீங்கள் திரைக்கதையாக தயார் செய்யுங்கள் அதனை சர்கார் படத்திற்கு பிறகு வெளியிடுவோம். ஒருவேளை அது சர்கார் படத்துடன் ஒத்துப்பானால் தனிப்பட்ட முறையில் உங்களின் உரிமைக்காக முருகதாஸுடன் சண்டையிட நான் ரெடி. முருதாதாஸ் சார் நீங்க ரெடியா? என்று முருகதாஸையும் டேக் செய்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் இயக்குனர் வருண் ராஜேந்தரியனுக்கு ஆதரவாக பேசிவரும் நிலையில் தற்போது இயக்குனர் வருண் ராஜேந்தரியனுக்கு ஆதரவாக திரைப்பட விமர்சிப்பாளரான பிரசாந்த் ஆதரவு தெரிவித்ததுடன் இயக்குனர் முருகதாசிற்கு சவாலும் விட்டிருக்கிறார்.

Advertisement

சர்க்காரின் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம், இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு வார்த்தை நடத்திய போது இயக்குனர் ராஜேந்திரனின் பெயரையாவது சர்கார் படத்தில் இணைக்கு மாறு கேட்டுக் கொண்டார். ஆனால், சர்கார் கதை தன்னுடையது என்றும் நடிகர் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு இந்த கதையை உருவாக்கியதாகவும் கூறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement