பல வருடங்களுக்கு பிறகு முத்தம் கொடுத்த வழக்கில் விடுதலை ஆன ஷில்பா. முழு விவரம் இதோ

0
558
shilpashetty
- Advertisement -

பல வருடங்களுக்கு பின் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட வழக்கில் சில்பா செட்டி விடுதலையாகி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். அதன் பின் பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் 1996 படங்களில் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். மேலும், இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் சில்பா செட்டி பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

ஷில்பா திரை பயணம்:

பின்னர் இரண்டாம் குழந்தை பெற்று எடுக்க முடியாத காரணத்தினால் வாடகை தாய் மூலம் பெற்றார் ஷில்பா ஷெட்டி. இது குறித்து அப்போது பலரும் விமர்சித்து இருந்தார்கள். தற்போதும் இவர் படங்களில் நடித்தும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் யோகா தொடர்பான விழிப்புணர்வையும் நடத்தி இருக்கிறார். மேலும், இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் பொது இடத்தில் சில்பா செட்டி அநாகரீகமாக நடந்து கொண்ட வழக்கு தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடந்தது:

2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அப்போதைய ஐநா சபையின் எய்ட்ஸ் நோய்க்கான சிறப்பு தூதராக இருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் கலந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தான் தொகுத்து வழங்கியிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் போது திடீரென்று நடிகர் ரிச்சர்ட் கெர், நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்த நிகழ்வு குறித்து நாடு முழுவதும் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

-விளம்பரம்-

ஷில்பா மீது வழக்கு:

ஆனால், நடிகர்- நடிகை இருவருமே இதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு அந்த மாதிரி ஒன்று நடக்காத போலவே இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக பொது மேடையில் இருவரும் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்கள். நடிகர் ரிச்சர்ட் கெர் முத்தம் கொடுத்தும் சில்பா செட்டி அதை தடுக்காமல் இருந்தது மிகவும் தவறான ஒன்று என்று அவர் மீது பழி சுமத்தினார்கள். இதுகுறித்து ரிச்சர்ட் கெர் மீதும் ஷில்பா ஷெட்டி மீதும் ராஜஸ்தான் ஆல்வார் நகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். நீண்ட காலமாக தொடரப்பட்ட இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

ஷில்பா வழக்கில் நீதிபதி கூறியிருப்பது:

இந்த நிலையில் தற்போது இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பது, உண்மையில் சில்பா செட்டி குற்றவாளி அல்ல. பாதிக்கப்பட்ட நபர். முதல் குற்றவாளியான ரிச்சர்ட் கெர் வலுக்கட்டாயமாக அவரை முத்தமிட்டுள்ளார். எனவே ஷில்பா மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் எந்த விதமான கற்பனையின் மூலம் ஒருவரை சதிகாரராகவோ,குற்றவாளியாகவோ ஆக்க கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் ஷில்பா ஷெட்டி விடுதலையாகியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement