மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே போல விவசாயிகள் போராட்டத்தில் சில கலவரவாதிகள் புகுந்ததால் தான் போராட்டம் கலவரலாமாக காரணம் என்றும் விவசாயிகள் சிலர் கூறி இருந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : துபாய் லாட்டரியில் ஜாக்பாட் அடித்த ஆர்யாவின் தங்கை – எத்தனை கோடி தெரியுமா ? வீடியோ இதோ.

Advertisement

இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரபல சர்வதேச பாடகியான ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை?” என்று பதிவிட்டு , விவாசயிகள் போராட்டம் தொடர்பான செய்தியையும் பகிர்ந்து இருந்தார். இந்தியர்களை தாண்டி ஒரு அயல் நாட்டு கலைஞர் இந்திய விவசாய பிரச்சனை குறித்து பேசியதை பலரும் பாராட்டினர்.

ஆனால், ரிஹானாவின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்து இருக்கும் நடிகை கங்கனா ரனாவாத் , யாரும் இதைப் பற்றி பேசவில்லை, ஏனென்றால் அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள், இதனால் சீனா நமது பாதிக்கப்படக்கூடிய உடைந்த தேசத்தை கையகப்படுத்தி அமெரிக்காவைப் போன்ற ஒரு சீனக் காலனியாக மாற்ற முடியும்… முட்டாள்தனமாக உட்கார்ந்து கொள்ளுங்கள், நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்க மாட்டோம என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இதோடு மட்டும் நிறுத்தி விடாமல் ரிஹானாவிற்கு தொடர்ந்து ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார் கங்கனா. மேலும், கங்கனாவின் சில ட்வீட்கள் விதிகளை மீறியதாகவும் ட்விட்டர் பக்கம் நீக்கியது. இப்படி ஒரு நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அதார்வாக ட்வீட் போடா ரிஹானாவிற்கு 18 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கங்கனா.

Advertisement
Advertisement