விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து தற்போது ஒரு தயாரிப்பாளராக அவரதராமெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவரது தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்திகேயன் ‘கனா’ படம் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், தான் அடுத்து தயாரிக்கவிற்கும் புதிய படத்தில் ரியோ ராஜ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவலையும் கூறியுள்ளார்.
சன் ம்யூசிக்கிள் தொகுப்பாளராக இருந்த ரியோ, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொர் மூலம் பிரபலமடைந்தார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோவாக நடிக்கும் பம்பர் பரிசும் தற்போது ரியோ ராஜிற்கு அடித்துள்ளது. ஆனால், அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை.