விபத்துக்கு அவர் இப்படி செய்தது தான் காரணம் – ரிஷப் பண்ட் அளித்த வாக்குமூலம் குறித்து வெளியிட காவல் துறை.

0
417
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சொகுசு காரில் பயணித்த அவர் இன்று காலை அதிகாலை 5.30 மணிக்கு கார் விபத்தில் சிக்கினார். அதிவேகத்தில் பயணித்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பில் மோதி தீ பிடித்து எரிந்தது.

-விளம்பரம்-

இதில் தலை (நெற்றி), முதுகு, கால் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ரிஷப் பண்ட் அங்கிருந்த பொதுமக்களின் உதவியின் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் :

- Advertisement -

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியதும் காரில் தீப்பிடித்து விட்டது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்து கார் கண்ணாடியை உடைத்து அவரே வெளியில் வந்து விட்டார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு அங்கு முதலுதவி பெற்றுக்கொண்ட ரிஷப் பண்ட் தற்போது டேராடூனில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான மேக்ஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரிஷப் பண்ட்டிற்கு எந்தவித எலும்பு முறிவோ, தீக்காயமோ கிடையாது என்று தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

-விளம்பரம்-

தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் ரிஷப் பண்ட் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி அசோக்குமார் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தான் சிறிது தூக்க கலக்கத்தில் இருந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டது என்றும் மற்றபடி இந்த விபத்திற்கு வேறெந்த காரணம் இல்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதிகாலை என்பதனால் சற்று தூக்க கலக்கத்தில் கவன குறைவாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரிஷப் பண்ட் வாக்குமூலம் அளித்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். அவரின் இந்த விபத்திற்கு பிறகு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனைகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement