இதை பார்க்கவே அசிங்கமா இருக்கு – மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து முன்னாள் வீராங்கனை ரித்திகா சிங்.

0
1900
Rithika
- Advertisement -

மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. டெல்லியில் மல்யுத வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த கூட்டமைப்பு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இதனை அடுத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்திரில் ஒன்று கூடி போராட்டமும் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் போன்ற பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின் போது அதை நோக்கி பேரணியாக மல்யுத்த வீரர்கள் செல்ல முயன்றிருக்கிறார்கள். அப்போது வீராங்கனைகளை போலீசார் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்:

பின் ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்தம் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோரை போலீஸ் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்திரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு அங்கிருந்த கொட்டைகள் அனைத்தையும் பிரித்தெடுத்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

சாக்ஷி மாலிக் அறிக்கை:

இனிமேல் மல்யுத வீரர்களுக்கு ஜந்தர் மந்திர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என்றும் டெல்லி போலீசார் தெரிவித்து இருக்கின்றது. பின் இது தொடர்பாக சாக்ஷி மாலிக் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எங்கள் கழுத்துக்களை அலங்கரிக்கும் பதக்கங்களுக்கு இனிமேலும் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன் உள்ளது என்று கூறி இருக்கிறார். இவரை அடுத்து பஜ்ரங் புனியா கூறி இருப்பது, எங்களுக்கு இனி எந்த பதக்கங்களும் தேவையில்லை.

பஜ்ரங் புனியா கூறியது:

எங்களுடைய உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கையில் வீசுவோம். மாலை ஆறு மணிக்கு ஹரித்துவார்க்கு சென்று கங்கையில் வீசிவிட்டு இந்தியா கேட் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போகிறோம் என்று கூறியிருக்கிறார். இதை அறிந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் டிக்கைட், வீரர் வீராங்கனைகள் தங்கம் வென்ற பதக்கங்களை ஆற்றில் வீசக்கூடாது என்று கூறி அவர்களிடம் இருந்து வீரர்களின் பதங்களையும் வாங்கி இருக்கிறார். இதனை அடுத்து மல்யுத்த வீரர்களும் தங்களுடைய முடிவுகளை மாற்றிக்கொண்டு ஹரிதுவாரில் இருந்து திரும்பி இருக்கின்றனர்.

ரித்திகா சிங் ஆதரவு :

இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்திகா சிங் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக அசிங்கமாகவும் இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. உலகத்திற்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். இவர்களின் குரல்களை மூடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், அதை அனுமதிக்காது ஒன்று சேருங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உண்மையில் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement