நடிகைகளின் போட்டோவை வச்சி இப்படிலாம் பண்னவீங்களா ? ரித்திகா சிங் வேதனை

0
516
Rithika
- Advertisement -

சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகிகளாகவோ விளம்பரத்தில் நடித்த நடிகைகளாக தான் இருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை மேடையில் அதிரடி பெண்ணாக இருந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்திகா சிங். தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

-விளம்பரம்-

இறுதி சுற்று படத்திற்கு பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். தன்னுடைய நடிப்பினால் என்க்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை ரித்திகா சிங் உருவாக்கி வைத்துள்ளார்.

- Advertisement -

நடித்த படங்கள் :

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” திரைபடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்து. தற்போது ரரித்திகா சிங் “இன் கார்” என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பாண் இந்தியா படமாக உருவாக்கி இருக்கிறது. மேலும் இப்படத்தை அஞ்சு குரேஷி மற்றும் சாஜித் குரேஷி இணைந்து தயாரிக்க ஹரிஷ் வரதன் இயக்கியுள்ளார்.

இன் கார் பத்திரிகையாளர் சந்திப்பு :

தமிழில் ஸ்டுடியோஸ் கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் வெளியிடும் இப்படம் வரும் மார்ச் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “இன் கார்” படத்தின் படங்க்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ரித்திகா சிங் கூறியது :

ரித்திகா சிங் பேசுகையில் “இன் கார்” நடிப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது. கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எப்படியெல்லாம் பிரச்னைகளை சந்திக்கிறாள், அதனால் அவருக்கு எந்த விதமான மனசிதைவுக்கு உள்ளாகிறார் என்பதை இப்படம் கூறுகிறது. என்னால் இந்த படத்தில் நடித்த பிறகும் வெளியில் வரமுடியவில்லை. அந்த அளவிற்கு பெரும் பாதிப்பை இப்படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது :

மேலும் பேசிய ரித்திகா சிங் “சமீப காலமாக சினிமாவில் நடிக்கும் கதாயாகிகளின் புகைப்படங்களை கட் செய்தும் எடிட் செய்தும் ஆபாசமாக மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். நான் கூட இந்த பிரச்னையை சந்தித்திருக்கிறேன். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. உங்களை போலவே எங்களுக்கும் குடும்பம், நண்பர்கள் இருக்கின்றனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே இது போன்ற ஆபாசமான மீம்ஸ் போடுவதர்க்கு முன்னர் ஒன்றிற்கு இரண்டு முறை யோசியுங்கள் என்று கூறினார். இவர் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement