பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கும் நபராக இருந்தால் நீங்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம் நீங்கள் நினைப்பது சரிதான், இது வேறு யாரும் இல்லை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ரித்விகா தான்.
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கிய பரதேசிதிரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோதிரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படத்தில் வட சென்னைப்பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த ரித்விகா ரஜினி நடித்த “கபாலி ” படத்திலும் நடித்திருந்தார். எந்த கதாபா த்திராமாக இருந்தாலும் அதில் திறம்பட நடித்து தனி பெயரை எடுத்து வருகிறார் நடிகை ரித்விகா. திரைப்படத்தில் நடித்து கிடைத்த பிரபலத்தை விட தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை ரித்விகா.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல், தமிழ் பெண்ணுக்கே உண்டான லட்சணத்துடன் இருக்கிறார் ரித்விகா. போட்டியாளர்களை நன்கு கவனித்து பின்னர் அவர்களிடம் அளவாக நடந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் இவரை சாதாரணமாக நினைத்த மற்ற போட்டியாளர்களும் தற்போது இவர் தான் கடினமான போட்டியாளர் என்று கூறி வருகின்றனர்.