தனக்கே உரிய பாணியில் கலாய்த்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி – சூரியா (TSK) படத்துக்கு இலவச விளம்பரம்

0
795
balaji
- Advertisement -

சூரியா – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பிரமோசன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

Actor Surya

மேலும், படத்தில் வரும் சொடக்கு மேல சொடுக்கு போடுது என்ற பாடல் கடத்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ஹிட் ஆனது. இந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் பாமர மக்கள் அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வண்ணம் இருக்கும்.

- Advertisement -

இதனால் கடுப்பான அதிமுக பிரமுகர் ஒருவர் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலில் வரும், ”இதுக்கெல்லாம் காரணம் நாம இல்ல, இதோ இவனுன்ங்க மாதிரி ஆளுங்க..! இவனுங்களையெல்லாம் பார்த்தாலே..! வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது..”, என்ற வரிகள் தங்கள் கட்சியை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Balaji

இதனை பார்த்த ஆர்.ஜே.பாலாஜி, தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த அதிமுக பிரமுகரை கலாய்த்துள்ளார்.

இந்த படத்தின் பிரமோசனுக்கு என பட்ஜெட்டில் தனியாக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் படத்திற்கு பிரமோசன் செய்ய வேண்டாம். மக்களுக்கு பிரச்சனை நிறைய உள்ளது அதனை முதலில் பாருங்கள்.

என தனக்கே உரிய பாணியில் அதிமுக பிரமுகரை கலாய்த்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Advertisement