உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ

0
195
- Advertisement -

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘சொர்க்கவாசல்’. இந்தப் படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் என்பவர்தான் இயக்கியிருக்கிறார். இதுதான் இவருடைய முதல் படம். இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி, ஹக்கிம் ஷா, சானியா ஐயப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஒரு சாதாரண ரோட்டு கடை உணவகம் நடத்தி வரும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (ஆர் ஜே பாலாஜி). எதிர்பாராத சூழலில் ஒரு அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட, அந்தக் கொலை பழி பார்த்திபன் மீது விழுகிறது. இனிமேல் குற்றங்களில் ஈடுபடமாட்டேன் என சிறைச்சாலைக்குள்ளேயே திருந்தும் முயற்சியில் இருக்கிறார் சிகா (செல்வராகவன்). தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பதவி வேறொரு வெளிநபருக்கு கிடைத்து விட்டதால் கடுப்பில் இருக்கிறார் சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் கட்டபொம்மன் (கருணாஸ்).

- Advertisement -

இதற்கு இடையில் சிறைச்சாலைக்குள் நிகழும் ஒரு மரணம், கலவரமாக மாறி வன்முறை வெடிக்கிறது. அந்த நரகத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் என்னென்ன முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் மீதி கதை. சிறைச்சாலையை களமாகக் கொண்டு தமிழில் மிகக் குறைவான படங்களே வந்திருக்கிறது. அந்த வகையில் சிறைச்சாலை செட்டப், அங்கிருக்கும் மனிதர்கள், அவர்களின் மனநிலை மற்றும் பிரச்சனைகள் என்று ஒரு சிறப்பான முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.

வழக்கமாக ஆர்.ஜே பாலாஜி நகைச்சுவை மற்றும் சமூக நீதி கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் செல்வராகவனின் நடிப்பு அனைவரும் பாராட்டக் கூடியதாக இருக்கிறது. மேலும், கருணாஸ், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, சோபா சக்தி, நட்டி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதோடு படத்தில் நிறைய ஷார்ப்பான வசனங்கள் இருக்கிறது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தத்துவ மழையை பொழிவது சிறிது கடுப்பேத்துகிறது.

-விளம்பரம்-

மேலும், இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் இசை திரில்லர் படத்துக்கு தேவையான ஹைப்பை தருகிறது. எடிட்டர் சிவா இந்த திரைக்கதைக்கு ஏற்றவாறு எடிட்டிங் செய்திருக்கலாம். சில கதாபாத்திரங்கள் படத்தில் முன்பே வந்து விடுவது கதையின் மீதான ஆர்வத்தை குறைக்கிறது. மேலும், இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதோடு, சிறைச்சாலையில் சிறை காவலர்களை எரிப்பது போன்ற காட்சிகளில் லாஜிக் இடிக்கிறது. படம் முழுவதும் வன்மம், ரத்தம், காயம் போன்ற காட்சிகளை கொண்டிருப்பதால் சிறுவர்கள் இப்படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது.

நிறை:

படத்தின் ஒன்லைன் சிறப்பாக உள்ளது

ஆர்.ஜே பாலாஜி மற்றும் செல்வராகவனின் நடிப்பு அருமை

பின்னணி இசை பலம்

குறை:

படத்தின் வசனங்கள் இயல்பாக இருந்திருக்கலாம்.

லாஜிக் குறைபாடுகள் உள்ளது

எடிட்டிங்கில் கவனம் செலுத்திருக்கலாம்.

சுவாரஸ்யம் குறைவு.

மொத்தத்தில் ‘சொர்க்கவாசல்’ ஒருமுறை பார்க்கலாம்

Advertisement