விரைவில் வெளியாக இருக்கும் தன் படத்தை promotion செய்ய சன் டிவி சீரியலில் வர இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி இருந்தார்.
இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.அதன் பின் எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டி இருந்தார் பாலாஜி.
ஆர் ஜே பாலாஜி இயக்கிய படங்கள் :
இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் பின் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார்.
வீட்ல விஷேசம் படம் :
இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.
வித்யாசமான promotion :
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் புரமோஷனை படு வித்தியாசமாக கையாண்டு கொண்டு இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
ஜீ தமிழ் சீரியலில் ஆர் ஜே பாலாஜி :
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை ப்ரோமோஷன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வீட்ல விஷேசம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே பல வீட்டு விசேஷங்களுக்கு அழையா விருந்தாளியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்து தன் படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி.