உதயநிதி முன்பே அவர் தயாரித்த படத்தை பங்கமாக கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி – அதுவும், விஜய் படம்னு சொல்றாங்களே.

0
292
rjbalaji
- Advertisement -

ஆர் ஜே பாலாஜி குறிப்பிட்டு கிண்டலடித்த படம் விஜய்யின் படமாக இருக்குமோ என்று ரசிகர்கள் பதிவிட்டு வரும் கமெண்டு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருந்தார். பின் ஆதவன் படத்தின் தயாரிப்பாளராக நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நான்கு படங்களை தயாரித்து இருந்தார். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் தான் உதயநிதி ஹீரோவாக களம் இறங்கி இருந்தார்.

-விளம்பரம்-

தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் உதயநிதி. இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த கண்ணை நம்பாதே, சைக்கோ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்நது உதயநிதி ஸ்டாலின் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

- Advertisement -

நெஞ்சுக்கு நீதி படம்:

இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேல் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், ஆர்யா, ஆர்ஜே பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ஜே பாலாஜி பேச்சு :

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி கூறியிருப்பது, உதயநிதியை எனக்கு 12 வருடமாக தெரியும். அரசியலில் இருந்தாலும் மக்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறார். சினிமாவில் ஆரம்பத்தில் உதயநிதி நடிக்க வரவில்லை. தயாரிப்பாளராக தான் இருந்தார். அப்போது அவரிடம் பேசின ஒரு விஷயம் இன்னும் ஞாபகம் இருக்கு. ஒரு நாள் ரொம்ப நேரம் நாங்க இரண்டு பேரும் சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்ப நான் அவரிடம் ஒன்று கேட்டேன். என்ன உதய், நீங்க இவ்ளோ சொல்றீங்களே எப்படி அந்தப் படத்தைத் தயாரிச்சீங்கன்னு? ஒரு படத்தைப் பத்தி கேட்டேன்.

-விளம்பரம்-

உதய் குறித்து ஆர்ஜே பாலாஜி சொன்னது:

அவர் என் தோளில் கை போட்டு எனக்கும் அந்த டவுட் இருந்தது. நானும் எடுத்தவர் கிட்ட போய், என்ன படம் சுமாராக இருக்கே? என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னொரு வாட்டி எடுக்கலாம் என்று சொன்னார். ஐயோ சார் விட்டு விடுங்கள் என்று உதய் சொன்னதாக ஆர் ஜே பாலாஜி கூறியிருந்தார். இப்படி ஆர் ஜே பாலாஜி பேசி முடித்ததும் அது என்ன படம் என்பதை பக்கத்தில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனிடம் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். அது என்ன படம் என்பது ஆர் ஜே பாலாஜி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த படத்தை இயக்கியவருக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும். இப்படி பாலாஜி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆர்ஜே பாலாஜி கிண்டல் செய்த படம்:

ஆர் ஜே பாலாஜி கூறுவதை வைத்துப் பார்க்கும்போது ஆரம்பத்தில் உதயநிதி தயாரிப்பில் ஆதவன், மன்மதன் அம்பு, குருவி, ஏழாம் அறிவு போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இவற்றில் ஆதவன், ஏழாம் அறிவு சுமாரான படங்களாக இருந்தது. குருவி, மன்மதன் அம்பு முற்றிலும் தோல்வியுற்ற படங்கள். மன்மதன் அன்பு கமலஹாசன் படம் என்பதால் அதைப்பற்றி பாலாஜி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. எனவே குருவி படத்தைப் பற்றிதான் பாலாஜி சொல்லி இருக்க வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் குருவி படத்தில் நடித்த நடிகர் பவன் கூட பேட்டி ஒன்றில் குருவி படம் பற்றி கிண்டலாகப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement