விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் நடுவில் இப்படி ஒரு சீக்ரட்டா.!போட்டுடைத்த பிரபல நடிகர்.!

0
348
Vijayajith

தமிழ் சினிமாவில் விஜய் ,மற்றும் அஜித் இரண்டு துருவ நட்சத்திரங்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவரது ரசிகர்களும் இன்று வரை தலயா, தளபதியா என்ற சண்டையை தொடர்ந்து தான் வருகின்றனர். ஆனால், இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விசாரித்துள்ளதாக நடிகர் ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

Roboshnakar

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியங்களில் ஒருவராக மாறிவிட்டார் ரோபோ. தற்போது விஸ்வாசம் படத்தில் தலயுடன் வசதியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரோபோ ஷங்கரிடம், விஸ்வாசம் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் விஜய் மற்றும் அஜித் குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் படியுங்க : அஜித்தை முதல் முதலில் சந்தித்த அனுபவம்.! இவ்வளவு பேசியுள்ளாரா தல.! ரோபோ ஓபன் டாக்.!

தல 60′ படத்தில் நான் கண்டிப்பாக இருப்பேன். நான் தளபதியிடம் சான்ஸ் கேட்டேன். தல படத்தில் எனக்கு ஆஃபர் கிடைத்துவிட்டது. எனது மகள் பிறந்தநாள் வாழ்த்துக்காக நடிகர் விஜய் போன் செய்தார். நேரில் சென்று அவரை சந்தித்தேன். அப்போது அஜித் எப்படி இருக்கிறார் என்று என்னிடம் கேட்டார். கேட்டதாக சொல்லுங்க என்று அவர் சொன்னார்.

தொடர்ந்து, விஜய்யை பார்த்ததாக அஜித்திடம் கூறினேன். அவரும் வாழ்த்தினார். எளிமையின் உச்சமாகவே இருக்கிறார் அவர். ரூ. 1,850 மதிப்புள்ள சாதாரண மொபைலை அவர் பயன்படுத்துகிறார். அவர் பயன்படுத்தியதை பார்த்த பின்பு நானும் சாதாரண மொபைலை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டேன்.