விஜய் டிவியில் நான் தான் யங் தாத்தா – மகள் கர்பமானதால் மகிழ்ச்சியில் ரோபோ ஷங்கர்

0
342
- Advertisement -

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார்.

-விளம்பரம்-

அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் தான் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்திரஜா-கார்த்திக் திருமணம்:

மேலும், சில கடந்த சில மாதத்துக்கு முன் இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மதுரையில் ‘தொடர்வோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். மேலும், இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி என்று படு கோலாகலாக தனது மகள் திருமணத்தை நடத்தி இருந்தார் ரோபோ ஷங்கர்.

-விளம்பரம்-

இந்திரஜா- கார்த்திக் சொன்ன குட் நியூஸ்:

திருமணத்திற்கு பின் இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி கலக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவர் ராதா, எப்போது எங்களுக்கு மகிழ்ச்சி செய்தியை சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

அதற்கு இந்திரஜா கணவர் கார்த்திக், நாங்கள் இருவருமே அப்பா -அம்மா ஆகப் போகிறோம். இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தோஷமான செய்தியை சொல்லி இருக்கிறார். அதற்குப் பின் நிகழ்ச்சிக்கு இந்திரஜாவின் தந்தை ரோபோ சங்கர் வந்து தன்னுடைய மகள் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக அவர், நான் தான் இங்கு இருப்பதிலேயே ரொம்ப யங் தாத்தா என்று சந்தோஷத்தில் கூறியிருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement