டயட் இருந்தேன், அண்ண வேணா சொல்லிட்டாரு. மேடையில் மனம் நெழிந்த ரோபோ ஷங்கர் மனைவி.

0
30626
Roboshankar
- Advertisement -

மெட்டி ஒலி போஸ் வெங்கட்டை தெரியாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? இவர் முதன் முதலாக சென்னைக்கு ஆட்டோ தான் ஓட்டி வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் மூலம் போஸ் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. பின் போஸ் அவர்கள் பிசியாக பல படங்களில் நடித்து வந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் முதன் முறையாக சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “கன்னி மாடம்”. இவர் இயக்கிய கன்னி மாடம் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதையை. இது முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் பாருங்க : இது போதுமா? இளசுகளை கிக் ஏற்றும் சுந்தர்.சி-யின் “இருட்டு” பட நடிகை.

சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவலில் இருந்து தான் இந்த படத்தின் தலைப்பு வைத்துள்ளது. ஸ்ரீராம் மற்றும் காயத்ரி படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். ரூபி பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ஹஷிர் தயாரிக்கிறார். ஹரிஷ் சாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் J இனியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் ‘மூணு காலு வாகனம்’ என்ற பாடலை பாடி உள்ளார். தற்போது ரோபோ சங்கர் அவர்கள் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரோபோ சங்கர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ரோபோ சங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் ரோபோ சங்கர் மனைவியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியிட்ட விழாவில் பேசிய ரோபோ ஷங்கரின் மனைவி, 10 வருடம் கழித்து இந்த படத்தை எடுத்தாலும் நான் இந்த படத்தில் நடிப்பேன் என்று அப்போதே சொன்னார் போஸ் அண்ணன். மேலும், இந்த படத்திற்காக நான் டயட் கூட இருந்தேன். ஆனால், நீ டயட் எல்லாம் இருக்க வேண்டாம், நீ எப்படி இருக்கிறியோ அப்படியே இரு என்று அண்ண சொல்லிட்டார் என்று கூறியுள்ளார் ரோபோ சங்கரின் மனைவி.

Advertisement