மறைந்த நடிகர் ரகுவரனின் ஆவணப்படம் குறித்த போஸ்டர் தான் தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கிறார்கள். அப்படி விவாகரத்து செய்தவர்களில் ரகுவரன் ரோகிணி ஒருவர். 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.
நைன்ட்டீஸ் ரசிகர்களுக்கு ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமாக இருந்தார் ரகுவரன். இவர் முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின் வில்லனாக நடித்தார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பெயர் போனது.
ரகுவரன் திரைப்பயணம்:
அதன் பின் 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார். இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன் பின் துணை வேடத்தில் நடித்து வருகிறார்.
ரகுவரன் – ரோகினி :
திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரனை கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ரகுவரன் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இவரது மரணத்திற்கு காரணம், அதிக குடிப்பழக்கம், தன்னுடைய மகனை பிரிந்த வேதனை தான் என்று கூறப்பட்டது.
ரகுவரன் மகன்:
ரகுவரன் தன் மகன் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். தற்போது ரகுவரன் மகன் ரிஷி உயரம், தோரணை, ஜாடை என்று அப்படியே தந்தை ரகுவரனை உரித்து வைத்திருக்கிறார். இவர் இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆங்கில மொழியில் இவர் ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய தந்தை பெயரில் இவர் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ரகுவரனுக்கு சினிமாவின் நுழைந்த ஆரம்ப காலத்தில் இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் அவர் நடிப்பு தேர்வு செய்திருந்தார். அவருடைய மகன் ரிஷி தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.
ரகுவரன் ஆவணப்படம்:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரகுவரனின் ஆவணம் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரகுவரன் மறைந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருடைய திரைப்பயணம், வாழ்க்கை, குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ஹாசிப் அபினா ஹகீப் என்பவர் தான் இயக்கி இருக்கிறார். தற்போது இந்த ஆவண படத்தினுடைய போஸ்டரை ரகுவரனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ரோகினி வெளியிட்டு இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.