அன்று தியேட்டரை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள் – இன்று ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்.

0
1892
- Advertisement -

ரோகிணி திரையரங்கில் லியோ படம் ரிலீஸ் செய்ய முடியாது என்று வெளியாகி இருக்கும் அறிவிப்பு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

அரசாங்க உத்தரவு:

அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நாளை படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான வேலைகளை படக்குழு தொடங்கி இருந்தார்கள். ஆனால், நீதிமன்றம் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்றும் உத்தரவு போட்டிருந்தார்கள்.

லியோ ரிலீஸ் சர்ச்சை:

இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமில்லாமல் படக்குவினர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இந்த பிரச்சினை காரணமாக சென்னையில் முக்கிய திரையரங்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெறவில்லை. இதனால் தமிழ் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம், விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் இடையே ஷேர் சம்பந்தமாக பேச்சுவார்த்தை முடியவில்லை. இதனால் தான் சென்னையில் உள்ள புகழ்பெற்ற பிரபலமான திரையரங்களில் இன்னும் லியோ படத்திற்கான புக்கிங் தொடங்காமல் இருக்கிறது.

-விளம்பரம்-

ரோகினி திரையரங்கம் சர்ச்சை:

அந்த வகையில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பேவரட் தியேட்டராக இருப்பது ரோகிணி திரையரங்கம். ஒரு படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்ற ரிசல்ட்டை இந்த திரையரங்கின் முலம்தான் நடிகர்களும் தெரிந்து கொள்வார்கள். அந்த அளவிற்கு ரோகிணி திரையரங்குக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கிறது. ஆனால், ரோகிணி திரையரங்கில் இதுவரை முன்பதிவு ஆன்லைன் எதுவும் தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் நேரடியாகவே திரையரங்கிற்கு சென்றிருந்தார்கள். அப்போது லியோ படம் ரோகிணி திரையரங்கில் வெளியிட படாது என்ற அறிவிப்பு பலகை போட்டு வைக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வந்து விட்டார்கள். இதற்கு காரணம், ஷேர் பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது.

முன்பதிவு செய்த திரையரங்கம்:

மேலும், ரோகிணி திரையரங்கம் மட்டும் இல்லாமல் கமலா, வெற்றி, சங்கம், தேவி போன்ற சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்காமல் இருக்கிறார்கள். இந்த பிரச்சனை இன்றுள்ளே முடிவுக்கு வந்தால் தான் லியோ படம் நாளை வெளியாகும். இல்லை என்றால் லியோ வசூலில் பெரியளவு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் லியோ ட்ரெய்லர் ரிலீஸ் ரோகிணி திரையரங்கில் வெளியிட்டு இருந்தார்கள். அப்போது ரசிகர்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் எல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்திருந்தார்கள். இதனால் திரையரங்கிற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கூட லியோ படத்தை வெளியிடாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement