தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 1 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

கொண்டாட்டங்களும் சேதங்களும் :

அஜித் மற்றும் விஜய் படங்கள் 8 வருடங்கள் கழித்து இருவரது திரைப்படங்களும் ஒன்றாக வெளியாவதினால் சோசியல் மீடியாவில் சரி, வெளியிலும் சரி பல மோதல்கள் ஏற்பட்டன. திரையரங்கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கண்ணனடிகள் உடைக்கப்பட்டன, போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயற்சி செய்த்தனர். இதனால் அந்த இடங்கள் முக்குவதும் கலவர பூமியாக காட்சியளித்து. ரோகினி திரையரங்கம் இந்த மோதலில் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

Advertisement

ரசிகர்கள் மோதல் :

மேலும் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதினால் சாமானிய மக்கள் ரோடுகளில் செல்வதற்க்கே மிகக் கடினமாக இருந்தது. துணிவு மற்றும் வாரிசு என இரு படங்களையும் உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதினால் அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதித்ததாகவும். இதனால் தான் இப்படி சில கலவரங்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நடை பெறுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பட வசூல் :

இந்த நிலையில் தமிழ் நாட்டில் முதல் மற்றும் இரண்டாம் நாள் முடிவில் வாரிசு படத்தை விட துணிவு அதிக வாசல் செய்திருந்தது ஆனால் உலகளவில் துணிவு திரைப்படம் வரிசை விட குறைவான வசூல் பெற்றுள்ளது. ஆனால் தற்போது வரையில் துணிவு தான் தமிழ் நாட்டில் அதிக வசூல் பெற்று வரும் நிலையில் இதற்க்கு காரணம் துணிவு படத்திற்கு அதிகமாகவும் வாரிசு படத்திற்கு குறைவாகவும் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதுதான் காரணம் என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பொங்கல் வின்னர் :

இப்படி பட்ட நிலையில் படம் வெளியானதில் இருந்தே வாரிசு தான் பொங்கல் வின்னர் என்று விஜய் ரசிகர்களும், துணிவுதான் இந்த பொங்கல் வின்னர் என்று அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், ரீவியூஸ் என ஒருவரை ஒருவர் கலாய்த்து #துணிவு #வாரிசு என ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நேற்று வாரிசு மற்றும் துணிவு படக் குழுவினரும் அவர்களுடைய படம் தான் இந்த பொங்களின் உம்மையான வின்னர் என்று போஸ்டர்களை தயார் செய்து வெளியிட்டனர். இதனால் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகியது.

Advertisement

வின்னரை அறிவித்த ரோகினி திரையரங்கம் :

இந்த நிலையில் தான் துணிவு மற்றும் வாரிசு வெளியாகி ஒரு வார முடிவில் அதாவது 7 நாட்கள் அடிப்படையில் ரோகினி திரையரங்கம் எந்த படம் முதலிடத்தில் உள்ளது என அதிகாரப்பூரவமாக ஒரு தகவலை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த பதிவில் ரோகினி திரையரங்கில் 1வார பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் தல அஜித்துடைய துணிவு NO.1 இடத்திலும், தளபதி விஜய்யுடைய வாரிசு NO.2 இடத்திலும் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

நெட்டிசன்களின் கருத்து :

மேலும் மூன்று, நங்கு, ஐந்து இடங்களில் முறையே அவதார் 2, கனெக்ட் மற்றும் கட்டா குஸ்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இது அதிகாரபூர்வ அறிவிப்பு என்பதினால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து #துணிவு #TheRealPongalWinner என பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். இருந்த போதிலும் இனி வரும் 3 நாட்கள் விடுமுறை என்பதினால் இனிதான் ஆட்டம் சூடு பிடிக்க போகிறது என கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement