ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால், திருடர்களுக்கு அவர் ஆதரவளிப்பது ஏன்? ரோஜா கேள்வி.

0
2219
roja
- Advertisement -

திருடர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏன் ஆதரவு அளிக்கிறார் என்று ரோஜா எழுப்பி இருக்கும் கேள்வி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் கடந்த 2015 முதல் 2019 வரை ஆந்திராவில் முதல்வராக இருந்தார். இவர் முதல்வராக இருக்கும்போது 10 சதவீதம் மாநில அரச நிதி பங்களிப்பும் 90% தனியார் பங்களிப்புடன் திறன் மேம்பாட்டு வாரியத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக 371 கோடி ரூபாயை சட்ட விரோதமாக சந்திரபாபு நாயுடு பரிமாற்றம் செய்திருக்கிறார். இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு வாரியம் சார்பில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தான் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருந்தார். பின் வரும் 22ஆம் தேதி அவரை சிறையில் வைக்க விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் செப்டம்பர் 11ஆம் தேதி உத்தரவு போட்டிருந்தது.

- Advertisement -

சந்திரபாபு நாயுடு கைது:

இதனை அடுத்து ராஜ முந்திரியில் உள்ள மத்திய சிறை சாலையில் சந்திரபாபு நாயுடு சந்திரபாபு நாயுடுவை அடைத்திருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்பு கருதி சந்திரபாபு நாயுடுவை வீட்டு சிறையில் அடைக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆந்திராவில் பரபரப்பான சூழல் நிலவி இருக்கிறது. அதோடு சந்திரபாபு நாயுடு சிறைக்கு சென்றதை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள்.

ரஜினி சொன்ன ஆறுதல்;

இதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகிசை தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார். அதில் அவர், என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது. அவரது தன்னலமற்ற பொது சேவை அவரை நிச்சயமாக வெளியே கொண்டு வரும். தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

ரோஜா பேட்டி:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால், திருடர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவளிப்பது ஏன்? அவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது. மக்களுக்காக போராடி சிறைக்கு சென்றவர்களுக்கு ஆதரவு கூறினால் மக்கள் பாராட்டுவார்கள். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவளிப்பது ஏன் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement