நடிகையை காதலித்து நிச்சயம் எல்லாம் முடித்து, திருமணத்திற்க்கு டிமிக்கி கொடுத்த காதலன் – நிச்சயதார்த்த புகைப்படங்கள்.

0
4664
roja
- Advertisement -

தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் கவரும் வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொடுக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் டிஆர்பி கிங்காண சன் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு மட்டும் பல்வேறு தொடர்கள் துவங்கியது அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலும் ஒன்று.

-விளம்பரம்-

இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா”, என்று செம ஃபீலிங் காதலனை நினைத்துஒரு உருக்கமான பதிவை போட்டிருந்தார். இதுகுறித்து இணையங்களில் பலவிதமான கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில் நடிகை பிரியங்காவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் கூட முடிந்தது.

- Advertisement -

பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை கடந்த சில காலமாக காதலித்து வந்தார். மேலும், இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது . இதுகுறித்து பேசி இருந்த பிரியங்கா, எங்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால், ஒரு சில காரணங்களால் கல்யாண தேதி தள்ளிக்கொண்டே போனது மேலும், எங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரிதாகி விட்டது.

ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்ற ராகுல், என்னை இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. கடைசி முயற்சியாக மிகவும் கஷ்டப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பயனும் இல்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிருச்சு இனிமேல் அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல வேண்டியதுதான். ஆல் தி பெஸ்ட் ராகுல் என்று கூறி இருந்தார் பிரியங்கா. இப்படி ஒரு நிலையில் இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement