வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் அதற்கு நான் கொடுத்தது பரிசு என் அம்மா உயிர் – அம்மாவை பறிகொடுத்துள்ள ரோஜா சீரியல் நடிகை.

0
1268
ramya
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-75.jpg

பின்னர் படப்பிடிப்புகளுக்கு கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கிஇருந்தது. அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டுஇருந்தனர். அதே போல கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சீரியல் படபிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

- Advertisement -

இப்படி கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் படப்பிடிப்புகள் நடைபெறுவதால் சீரியல் நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஞ்சினர். ஆனால், சேனல் தரப்போ ஏதாவது எதிர்த்து பேசினால் எங்களை நீக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் தான் ஷூட்டிங் செல்கிறோம் என்கிறார் அந்த பிரபல சீரியல் நடிகர் ஒருவர். இப்படி ஒரு நிலையில் கொரோனா தொற்றால் தனது அம்மாவை பறிகொடுத்து உள்ளார் ரோஜா சீரியல் நடிகை ரம்யா.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், அம்மாவிற்காக தான் நான் கடந்த ஆண்டு ரோஜா சீரியலில் இருந்து விலகினேன். ஆனால், நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறோம். அதற்கு நான் கொடுத்த விலை என் அம்மாவின் உயிர். சும்மா என் உடல் இரும்பு மாதிரி எனக்கு ஒன்னும் ஆகாது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். என் அம்மா 3 நாட்கள் பட்ட வேதனையை கண் முன்னாள் பார்த்திருக்கிறேன். கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement