திருமணநாளில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன ரோஜா சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்.

0
572
akshaya
- Advertisement -

ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே அக்ஷயா தன் திருமண நாளில் அனைவருக்கும் இனிப்பான ஒரு செய்தி கொடுத்திருக்கிறார். இப்போதுதான் சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், என பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு வகையான தொலைக்காட்சிகளில் நடந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிவி நிகழ்ச்சிகள் தினசரி நம் வாழ்வில் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் தமிழக முழுவதுமே பார்த்துக் கொண்டிருந்த டிவி என்றால் அது சன் டிவி தான். அந்த அளவுக்கு அதில் வரும் நாடகங்களும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

ரோஜா சீரியல் :

இந்நிலையில் எவ்வளவு தொலைக்காட்சி டிவிகள் வந்தாலும் சன் டிவியில் வரும் சில நிகழ்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த சீரியல். இந்த சீரியலும் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் இந்த சீரியலுக்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கின்றனர். குறிப்பாக சன் குடும்ப விருதுகளில் சீரியலில் கொடுக்கப்படும் முதன்மை விருதுகளில் அதிகபட்சமான விருதுகள் ஆனைத்தையும் ரோஜா சீரியல் தான் வாங்கி இருந்தது.

- Advertisement -

கதை :

ஒரு அனாதை பெண் அனாதை இல்லத்தில் இருந்து வெளியேறி ஒரு வக்கீலை சந்திக்கிறார் தான் சந்தித்த அந்த வக்கீலயே சில அசம்பாவிதங்கள் காரணமாக தன் கணவனாக மாறிவிடுகிறார். தன் கணவனுடன் இணைந்து இந்த சீரியலில் வில்லியாக வரும் அணு தரும் பிரச்சனைகளை தன் கணவனுடன் கைகோர்த்த வாரே இருவரும் சேர்ந்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பது தான் கதையாக உள்ளது. இந்த சீரியலில் ஏற்கனவே அணு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கர்ப்பமாக ஆனதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் விஜே அக்ஷயா இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்காக வந்தார்.

சன் மீயுசிக் தொகுப்பாளர் :

விஜய் அட்சயா தன் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை துவங்கினார். இவர் தொகுத்து வழங்கிய ஷோக்கள் அனைத்தும் ஹிட்டாக தொடங்கி விட்டது. இவர் வரும் நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. சன் மியூசிக் கலக்கிய அக்ஷயா சன் டிவியிலும் வணக்கம் தமிழா மற்றும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார் இந்நிலையில் தான் ரோஜா சீரியல் வில்லியாக நடிப்பதற்கு விஜே அக்ஷயாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

முதலில் அணூவாக ஏற்க மறுத்த மக்கள் :

முதலில் இவரை அணுவாக ஏற்க ரசிகர்கள் மறுத்துவிட்டனர் இதனால் ரோஜா சீரியல் இன் பிரபலம் குறைய தொடங்கியது. அக்ஷயா தனது நேர்த்தியான நடிப்பாலும் தத்துரூபமான வசனங்களாலும் ஒரு வழியாக ரசிகர்களைக் கவர்ந்து மறுபடியும் சீரியலை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார். இப்பொழுது அக்ஷயாவை அணுவாக ரசிகர்கள் முழுவதுமாக பார்த்து பார்த்து எற்றுக் கொண்டு விட்டனர். நிலையில் தான் விஜே அக்ஷயா விநாயகர் சதுர்த்தி தினத்தில் தன் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கொடுத்திருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் விஜே அக்ஷயா :

ஆம், விஜே அக்ஷயாவுக்கு கல்யாணம் ஆன செய்தி கூட இன்னும் பல ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தனது கல்யாண நாளில் தன் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற செய்தியை தன் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அவரும் தன் கணவரும் இருப்பது போன்ற புகைப்படத்தை போட்டு பதிவிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜ அக்ஷயா இதிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அவர்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு அக்ஷயாவிற்கு கல்யாணமான ஆகிவிட்டதா என்று செய்தியை கேட்டு முதலில் மிரண்டனர் இருந்தாலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று இனிமையான செய்தியை பார்த்து தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement