மான் கராத்தே படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை – இதுவரை நோட் பண்ணி இருக்கீங்களா ?

0
7616
maan
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த 800 எபிசோடுகளை கடந்து பிரம்மாண்ட மைல் கல்லை எட்டியது.

- Advertisement -

இந்த ரோஜா சீரியலில் பிரியா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஷாமிலி. இவர் ஏற்கனவே ஏற்கனவே வாணி ராணி பாசமலர் பொன்னூஞ்சல் வள்ளி மாப்பிள்ளை போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிவ கார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ திரைப்படத்தில் அவர் மிகச்சிறிய ரோலில் நடித்திருக்கிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அதனால் அவருக்கு பதிலாக vj அக்ஷயா நடித்து வருகிறார். குழந்தை பிறந்ததும் மீண்டும் இவர் ரோஜா சீரியலுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement