ஹீரோவை மாற்றியதும் ரோஜா சீரியலை Trpயில் பின்னுக் தள்ளி முதல் இடத்தை பிடித்த சீரியல்.

0
11958
roja
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த 800 எபிசோடுகளை கடந்து பிரம்மாண்ட மைல் கல்லை எட்டியது.

இதையும் பாருங்க : விவாகரத்து ஆன பின் பல ஆண்டுகள் கழித்து தாயான ரேவதி – குழப்பத்திற்கு அவரே அளித்த விளக்கம். (தத்து கூட எடுக்கலயாம்)

- Advertisement -

இது பற்றி சன் டிவி ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி கூறிட்வீட் ஒன்றை போட்டு இருந்தது. கடந்த சில மாதங்களாகவே TRP ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் மற்ற தொலைகாட்சி சீரியல்களை முறியடித்து தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் Trpயை முறியடித்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறது பூவே உனக்காக சீரியல். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்த அசீம் இந்த தொடரில் நாயகனாக கமிட் ஆனார். விஜய் டிவிக்கு முன்பாகவே அசீம் சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ தொடரில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அசீம் இந்த சீரியலில் நடிக்க துவங்கிய முதல் வாரத்திலேயே Trp யில் ரோஜா சீரியலை பின்னுக்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement