காதல் மிகவும் ஆழமானது. தனது காதல் அனுபவம் குறித்து பேசியுள்ள ரகுல் ப்ரீத் சிங்.

0
1378

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை ரகுல் பிரித் சிங் திகழ்ந்து வருகிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல இந்தி மற்றும் கன்னட மொழி கூட திரைப் படங்களில் கூட நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் அவர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வந்தது.

நடிகை ரகுல் பிரித் சிங் ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, தென்னிந்திய படங்களின் மூலம் எனக்கு நல்ல அந்தஸ்து கிடைத்து வருகிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் கதாநாயகர்களுடன் படங்களில் நான் நடித்து வருகிறேன். காதல் பற்றி என்னிடம் நிறைய பேர் கேட்டு உள்ளார்கள்.

- Advertisement -

காதல் அழகானது, ஆழமானது. அதை புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டமான விஷயம். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், காதல் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். ஒவ்வொரு படத்திலும் கதாநாயகி விரட்டி விரட்டி காதலித்து ஏதோ ஒரு கோணத்தில் காதலரை விட்டு வருவது என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு கதையும் எனக்கு புது புது காதல் அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. இதனால் எனக்கு காதலில் நிறைய அனுபவம் கிடைத்து உள்ளது. சினிமா துறைக்கு வராமல் இருந்து இருந்தால் எனக்கு காதல் பற்றி இந்த அளவிற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்காது. காதல் மட்டும் கிடையாது ஒவ்வொரு படத்திலும் புது புது அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது.

படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் ஒரு புதிய வாழ்க்கையை அனுபவித்ததற்கு சமம். அந்த வகையில் சினிமா பயணத்தில் நான் எத்தனையோ வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன் என்று கூறி இருந்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 என்ற படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும்ஒரு புதிய படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் நடித்து வருகிறார். மேலும், இந்த இரண்டு படங்களை தவிர அம்மணிக்கு வேறு பட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement