நிஜத்தில் ஒரு RRR ராமராஜு – கூட்டத்தில் ஒற்றை ஆளாய் இறங்கிய போலீஸ், தெறித்து ஓடிய அடாவடி நபர்கள். வைரலாகும் வீடியோ இதோ.

0
276
- Advertisement -

RRR பட பாணியில் தமிழ்நாடு போலீஸ் ஒருவர் செய்த செயல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து திரைக்கு வெளியாகி உள்ளது. RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்று பொருள். இந்த படத்தில் ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் VFX காட்சிகள் அற்புதமாக வந்து இருக்கிறது. அதோடு ஆக்ஷன் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

- Advertisement -

500 கோடி கடந்த வசூல் :

இந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr-ன் நடனத்தை பார்த்து ஆடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இந்த படம் 400 கோடி தயாரிப்பில் உருவானது. ஆனால், 500 கோடிக்கு மேல் அதிகமான வசூலை ஈட்டி உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. அதே வேளையில் படத்தில் கதாநாயகியாக நடித்த ஆலியா பட் அவர்கள் RRR படத்தின் இயக்குனர் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏன்னா, பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அலியா பட்.

RRRல் போலீசாக அசத்திய ராம் சரண் :

இவர் RRR படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் அவர் மொத்தமே 7 சீன்கள் அளவுக்கு தான் காட்சிகளில் நடித்திருக்கிறார். இருந்தாலும் படம் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் RRR பட பாணியில் தமிழ்நாடு போலீஸ் ஒருவர் செய்த செயல் குறித்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், RRR படத்தில் பொது மக்கள் எல்லோரும் காவல் நிலையத்திற்கு முன் நின்று பயங்கரமாக கரகோஷம் போட்டும், கத்தியும், போலீஸ் போட்ட வேலியை உடைக்க முயற்சி செய்வார்கள்.

-விளம்பரம்-

மாஸான Intro :

இதனால் பல போலீசார்கள் என்ன செய்வதென்று புரியாமல் பயத்தில் இருப்பார்கள். பின் மக்கள் எல்லோரும் போலீஸ் உருவ பொம்மைக்கு தீ வைத்து பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதை சமாளிக்க முடியாமல் வெள்ளைக்கார போலீசார்கள் எல்லோரும் மிரண்டுபோய் பயத்தில் இருப்பார்கள். அப்போது போலீசாக இருக்கும் ராம் சரண் சிங்கம் போல் சீறி கொண்டு எதிரிகளை துவம்சம் பண்ணும் காட்சி பார்ப்பதற்கு பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும். ராம் சரணை பார்த்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டி ராம்சரணை தாக்குவார்கள்.

நிஜத்தில் ஒரு ராமராஜு :

ஆனால், ராம் தனியாளாக போராடுவதைப் பார்த்து போலீஸ், மக்கள் பலரும் மெய்சிலிர்த்து போவார்கள். இந்நிலையில் தற்போது RRR பட பாணியில் தமிழ்நாடு போலீஸ் ஒருவர் செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவிழாவில் இளைஞர்கள் பலர் போட்டு வைத்திருக்கும் தடுப்பு சுவரின் மீது ஏறி பயங்கரமாக அட்டகாசம் செய்திருக்கிறார்கள். அங்கிருந்த போலீஸ் ஒருவர் அவர்களை குச்சியால் துரத்தி கொண்டு போகிறார். அவரை பார்த்தவுடன் மொத்த கூட்டமும் அரண்டு போய் ஓடுகிறது. தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தமிழ்நாட்டு போலீஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement