மீண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கொக்கி போடுகிறாரா இந்த நடிகை ?

0
7353
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் தமிழில் மாநகரம் கைதி என்ற தனது முதல் இரண்டு படத்திலேயும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் சாந்தனு மாஸ்டர் மகேந்திரன், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா என்று ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 65 வது யார் இயக்கப்போவது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

-விளம்பரம்-
Image result for vijay 65

- Advertisement -

வெற்றிமாறன், மகிழ் திருமேனி, அருண்ராஜா காமராஜ் என விஜய்65 படத்தை இயக்கப்போவது யார் என்ற லிஸ்ட் நீண்டு கொண்டே போன நிலையில் தற்போது விஜய்65 வாய்ப்பை முருகதாஸ் பிடித்துள்ளார். விஜய் 65 படத்துக்கான இயக்குநர் என ஏறக்குறைய உறுதியான செய்திகள் வெளியாக, விஜய் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களெல்லாம் தயார் செய்யத் தொடங்கிவிட்டனர்.  ஆனால், இந்த படத்தை பற்றிய எந்த ஒரு சிறு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் பாருங்க : மனைவியும் இல்லை மகளும் இல்லை. ஆனால், விசுவின் படங்களில் இந்த உமா என்ற பெயர் இல்லாமல் இருக்காது.

-விளம்பரம்-

அதற்குள்ளாகவே இந்த படத்தில் விஜய் ஜோடி யார் என்ற கிசு கிசு சமூக வலைதளத்தில் உலா வர துவங்கிவிட்டது. அது வேறு யாரும் இல்லை விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா போன்ற இரண்டு படங்களில் நடித்த காஜல் அகர்வால் தான். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடி கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது நீங்கள் தளபதியுடன் மீண்டும் இணைவீர்கள் என்று கேட்டிருந்தார்

அதற்கு பதில் அளித்த காஜல் அகர்வால்,  எனக்கு மிகவும் பிடித்து சக நடிகை தளபதி விஜய் தான். அவருடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் கூடிய விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம் ஏற்க்னவே விஜய் – காஜல் – முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விஜய் – முருகதாஸ் சாக்ஸஸ் ரேட்டை எடுத்துக்கொண்டால், வில்லு வேட்டைக்காரன் என்று தொடர் தோல்விகளை கொடுத்த விஜய்க்கு தனது 50வது படமான சுறா படம் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் வெளியான காவலன் வேலாயுதம் நண்பன் போன்ற படங்கள் விஜய்க்கு கைகொ.டுத்தது இருப்பினும் ஒரு மாசான வெற்றி படமாக விஜய்க்கு அமைந்தது 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம். இந்த படத்தின் மூலம் விஜய் இழந்த தனது மாஸை புதுப்பித்துக் கொண்டா.ர் அந்த படத்திற்கு பின்னர் மீண்டும் தலைவா ஜில்லா என்று 2-பிளாப் படங்களை கொடுத்தார் விஜய்.

Image result for Thupaki shooting spot

பின்னர் முருகதாஸுடன் மீண்டும் இணைந்து கடந்த 2014 ஆம் ஆண்டு கத்தி என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார். கத்தி படத்திற்கு பின்னர் வெளியான 4 படங்களில் தெறி, மெர்சல் மற்றும் ஓரளவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்க்கார் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி. ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது தளபதி 65 மூலம் நான்காவது முறையாக இணைய இருக்கிறார்கள் விஜய் மற்றும் முருகதாஸ். சர்க்காரில் கொஞ்சம் சறுக்களை சந்தித்த முருகதாஸ், விஜய் 65 படத்தை கொஞ்சம் கவனமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement