இரண்டு முறை நடந்த திருமணம், 55000 ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட விருந்து – எஸ்.ஏ.சியின் ஸ்வாரஸ்யமான வீடியோ.

0
344
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். நம்ம இளைய தளபதி விஜய்யின் தந்தை ஆவார். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் பணியாற்றி வருகிறார். தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவர் விஜய் மட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கி உள்ளார். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”.

- Advertisement -

எஸ் ஏ சந்திரசேகரின் திரைப்பயணம்:

இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை.

பிளாட்பார்மில் எஸ்.ஏ.சி வீடியோ:

தற்போது இவர் தன் வாழ்க்கை பயணம் குறித்த வீடியோவை பிளாட்பார்மில் எஸ்.ஏ.சி என்ற தலைப்பில் ரிலீஸ் செய்துள்ளார். எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்ய இருப்பதாக ஏற்கனவே அந்த சேனலின் promo ஒன்றை ரிலீஸ் செய்து இருந்தார். பின் தன் வாழ்க்கை வரலாற்றின் முதல் எபிசோடை எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.

-விளம்பரம்-

விஜய் திருமணம் குறித்து சந்திரசேகர் கூறியது:

இந்நிலையில் விஜய் திருமணம் குறித்து சந்திரசேகர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் திருமணத்திற்கு நாங்கள் 15 ஆயிரம் ரசிகர்கள் மட்டும் கூப்பிட்டு பிரியாணி போட்டதாக கூறி இருக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. நாங்கள் விஜய் திருமணத்தின்போது 55 ஆயிரம் ரசிகர்களை வரவைத்து நேரு அரங்கத்தில் திட்டமிட்டு பிரம்மாண்டமாக செய்தோம். 4 அடுக்கிலும் இசைக்கச்சேரிகள் நடத்தினோம். விஜய் – சங்கீதாவை ரசிகர்கள் மத்தியில் நடக்க வைத்து மாலை மாற்றி மிகப் பிரமாண்டமாக நடந்தது.

விஜய்-சங்கீதா திருமணம்:

இந்த அளவிற்கு அற்புதமாக வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. விஜய் – சங்கீதாவுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. விஜய்யின் விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement