1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கிழக்கு சீமையிலே. இந்தப்படத்தில் நெப்போலியன், விஜயகுமார், ராதிகா, விக்னேஷ் பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் முற்றிலும் கிராமப்புற மண்வாசனையை நமக்கு திரும்ப நினைவுக்கு கொண்டு வந்த படமாகும். இந்த படத்தின் பாடல்கள் வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார். மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும்,இந்த படம் அண்ணன்,தங்கை பாசத்தை தெளிவாக காட்டியது.

இதனைத்தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா அவர்கள் பற்றி தெரியாதவர்கள் எவரும் இலர். மேலும்,எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இயற்பெயர் எஸ்.ஜஸ்டின்.செல்வராஜ் ஆகும். இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளில் பன்முகங்களை கொண்டவர். இவர் தமிழ் சினிமா திரை உலகில் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். மேலும்,சூப்பர் ஹிட் படங்களான வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர்.

இதையும் பாருங்க : குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். பிக் பாஸ் நடிகை லாரன்சுக்கு உருக்கமான பதிவு.

Advertisement

அதோடு சூர்யாவின் வாலி,விஜய்யின் குஷி போன்ற படங்களுக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, படங்களை நடித்தும், தயாரித்தும் உள்ளார். மேலும்,நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை அவரே எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்துள்ளார். தற்போது ஒரு நாள் கூத்து படம் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”.

இந்த படம் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தளபதி விஜயின் மெர்சல் படத்தின் வில்லனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் ஒரு புதுப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படம் முற்றிலும் திகில் படமாக இருக்கும் எனவும், இந்த படத்தில் பெயிண்டராக நடிக்கிறார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

Advertisement
Advertisement