குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். பிக் பாஸ் நடிகை லாரன்சுக்கு உருக்கமான பதிவு.

0
54116
lawrance
- Advertisement -

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த சுஜித்தின் மரணம் தமிழகத்தயே உலுக்கியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் 4 நாட்களாக நிகழ்ந்தது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும், நான்கு நாட்களை கடந்தும் சுர்ஜித்தை உயிருடன் வெளியே எடுக்க முடியவில்லை.

மேலும், சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் தான் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. பின்னர் சுஜித் இறந்து எவ்வளவு மணி நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்வதற்காக சுஜித் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். சமூக வலைத்தளங்களில் சுர்ஜித் இழப்பிற்கு சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், சுஜித்தின் இறப்பிற்கு இரங்கலை தெரிசித்துள்ள பிரபல நடிகர் லாரன்ஸ், சுஜித்தின் பெற்றோருக்கு வேண்டுகோள் ஒன்றையும்வைத்திருந்தார்.

இதையும் பாருங்க : பிகில் படத்தின் தென்றல், விஜய்யின் தெறி படத்தில் இந்த காட்சியில் நடித்துள்ளாரா ? புகைப்படம் இதோ.

- Advertisement -

அதில், சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ” அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தைய தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

லாரன்ஸின் இந்த பதிவு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி லாரன்ஸின் இந்த பதிவை கண்டு, தானும் ஒரு குழந்தயை தத்தெடுக்க விரும்புவதாகவும், அதற்கு உதவி செய்யுமாறும். கூறியுள்ளார் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது என்னவெனில், உங்கள் தொடர்பு எண் தவறிவிட்டது லாரன்ஸ் மாஸ்டர். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். வாழ்க்கை ஒரு குழந்தையில்லாமல் முழுமையடையவில்லை. குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை. அந்தக் குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தால் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

நடிகை காஜல், பிக் பாஸ் நிகச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்ற சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் சாண்டிக்கும் காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் சமீபத்தில் ஊடகத்தில் செய்திகள் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் கேட்டுள்ள போது, எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன். இதை பற்றி நான் பல முறை அவரிடம் சொனேன். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டு வருகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement