திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவராகவோ அல்லது பல மாற்றத்தை ஏற்ப்படுத்தும் ஒரு இயக்கத்தில் தலைவராகவோம் மாறுவது தமிழகத்தில் புதிதல்ல. இந்திய குடிமகனாக இருக்கும் எந்த ஒரு மனிதனும் இயக்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது அரசிலயமையப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள உரிமையாகும்.
திரைப் பிரபலங்கள் அரசியளுக்கு வர கூடாது என் ஒரு சாரார் எதிர்த்து வந்தாலும், மக்களின் மன நிலை என்னவோ அந்த பிரபலத்தை தேடுவதாகத் தான் இருக்கிறது. அதற்கு நடிகர் விஜயும் விதிவிளக்கல்ல. விஜ்யின் படங்களுக்கு வரும் அரசியல் எதிர்ப்புகளே அதற்க்குச் சான்றாகும்.

தற்போது மெர்சல் பட விவகாரத்தில் தேசிய அளவில் அவருக்கு சற்றும் பிரபலத்தை தேடித்தந்தது பி.ஜெ.பி தான். தற்போது அந்த கட்சியின் ஹெச்.ராஜா அவரை மத ரீதியாக  தனிமைப்படுத்தும் முயற்சி ‘யாணை தன் மேல் மன்னை வாரி போட்டுகொண்ட’ நிகழ்வாகிவிட்டது.

Advertisement

தற்போது விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜயின் அரசியல் பற்றி கருத்துக்களை கூறியுள்ளார்,
அதாவது விஜய் ஒரு தலைவராக வர வேண்டும்நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம் என அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement