கேப்டன் விஜயகாந்த் 1980-ல் இயக்குனர் கே.விஜயன் என்பவரின் இயக்கத்தில் வெளியான துராத இடி முழக்கம் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சினிமாவில் நுழைந்து விட்டார் நமது கேப்டன் விஜயகாந்த்
.சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன,அதனை சிறப்பிக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் விஜயகாந்த் தலைமுறை நடிகர்களும், இயக்குனர்களும் பங்குபெற்றனர்.

Advertisement

இந்த விழாவில் நடிகர் சரத்குமார் ,ஆனந்த ராஜ்,எஸ்.ஏ. சி,மன்சூர் அலிகான்,கலைப்புலி தாணு,நாசர்,மனோபாலாபோன்ற பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களுக்குள் நடந்த ஸ்வரசியமான சம்பவங்களை பகிர்ந்தனர்.இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ். யே. சி விஜயகாந்த பற்றி ஒரு பெருமையான சம்பவத்தை கூறியுள்ளார். நடிகர் விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சி விஜயகாந்த்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி விஜயகாந்த் நடித்த இரண்டாவது படமான சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் மாபெரும் ஹிட்டானது.அதன் பின்னர் விஜயகாந்த்தை வைத்து நெஞ்சில் துணிவிருந்தால் ,ஜாதிக்கு ஒரு நீதி பிழைத்தது என்று விஜயகாந்தை வைத்து தொடர்ந்து படங்களை எடுத்தார்.

Advertisement

மேலும் எஸ்.யே. சி 1993 ஆம் ஆண்டு செந்தூர பாண்டி என்ற படத்தை எடுக்கும் போது விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தார் அப்போது அந்த படத்தில் நடிப்பதற்கு விஜய்காந்திடம் எஸ்.யே. சி சம்பளம் பேசிய போது நடிகர் விஜயகாந்த் சம்பளத்தை பற்றி எல்லாம் பிறகு பேசிக்கொள்வோம் முதலில் படப்பிடிப்பை தொடங்குங்கள் சார் என்று சொன்னாராம் கேப்டன்.

Advertisement

90 காலகட்டங்களில் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தாலும் தம்மை ஆளாக்கிய நபரை மதித்து பழசை மறக்காமல் விஜயகாந்த்தின் அந்த நல்ல மனசுக்குத்தான் அவரை எல்லோரும் இன்றும் கேப்டன் என்று அழைக்கிறார்கள்.

Advertisement