சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சாய் காயத்ரி. இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் பிற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா ரோலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்து இருந்தது.
இடையிலே இந்த தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகி இருந்தார். தற்போது இவர் நீ நான் காதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடர் சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக பிரேம் ஜேக்கப் நடிக்கிறார்.
சாய் காயத்ரி குறித்த தகவல்:
இந்த சீரியலில் சாய் காயத்ரி ஹீரோயினின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலின் காட்சி குறித்து சாய் காயத்ரி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கோவிலில் உப்பின் மீது காயத்ரி முட்டி போட்டு வருவது போல் பரிகாரம் செய்திருப்பார். இதை பலர் கிண்டல் செய்திருந்தார்கள்.
சாய் காயத்ரி பதிவு:
இது உப்பே இல்லை, நடிக்கிறார்கள் என்று சொன்னார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் சாய் காயத்திரி பகிர்ந்திருக்கிறார். அதில் நிஜமான உப்பை தான் கொட்டி முட்டி போட்டு நடந்து இருக்கிறார். பின் அவர், உனக்கு என்னப்பா நீ ஜாலியா இருக்க, ஒரு நடிகையா நடிக்கிறது நல்ல எளிமையான வேலை தான். ஒரு சீன், அந்த காட்சி எடுக்கும் போது ஒரு வாரம் நான் முட்டி வலியால் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
உப்பு காட்சி குறித்து சொன்னது:
நார்மல் ஆகுவதற்கு எனக்கு சில நாட்கள் ஆனது. ரெஸ்ட் எடுக்காமல் நான் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தேன். அதனால் தான் எனக்கு கால் வலி சரியாகவில்லை. நான் சினிமா துறையை மட்டும் சொல்லவில்லை. எல்லா துறையிலுமே ஏற்றம் இறக்கம் இருக்கிறது. எல்லாருக்குமே வலியும் இருக்கிறது. உப்பு மீது முட்டி போட்டு நடக்கும் காட்சி மனப்பூர்வமாகவும் கடவுளின் ஆசிர்வாதத்தோடு தான் செய்து முடித்தேன். எனக்கு மொத்த டீமுமே சப்போட்டாக இருந்தது நன்றி என்று கூறியிருக்கிறார்.