ராமராஜனின் சாமானியன் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். இவர் ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த காலத்தில் வெறும் அரை ட்ரவுஸரில் அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.

சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அதற்கு பின் இவருக்கு பெரியதாக வாய்ப்புகள் வரவில்லை என்றவுடன் அரசியலில் களம் இறங்கி விட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சாமானியன்.

Advertisement

சாமானியன் படம்:

இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கே எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். படத்தில் பரபரப்பாக ஒரு வங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது.

படத்தின் கதை:

இந்த வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்போது சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி போன்ற பொருட்களை எல்லாம் காட்டி மேனேஜரை மிரட்டுகிறார். வங்கியில் உள்ள எல்லோருமே பயந்து விடுகிறார்கள். பின் அந்த வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த சாமானியன் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்து வங்கியை போலீஸ் சூழ்ந்து விடுகிறது. பின் மீடியாவிற்கும் இந்த விவகாரம் தெரிய வருகிறது.

Advertisement

படம் குறித்த விவரம்:

வங்கியையும் அங்கு இருக்கும் மக்களையும் மீட்க அந்த சாமானியன் கோரிக்கை வைக்கிறார். அவர் வைக்கும் கோரிக்கைக்கு போலீஸ் ஒத்துழைத்ததா? அந்த சாமானியன் யார்? அவன் ஏன் வங்கியை கொள்ளையடிக்க வந்தான்? அவன் வைத்த கோரிக்கை தான் என்ன? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜனை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விட்டார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் சாமானியன் படம் வரவேற்பு பெறவில்லை.

Advertisement

சாமானியன் படம் வசூல் விவரம்:

பாக்ஸ் ஆபீஸில் வெளியாகி இருக்கும் தகவல் தகவல் படி சாமானியன் படம் முதல் நாளில் 3 லட்சம் வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது நாளில் 3 லட்சம், மூன்றாவது நாளில் நான்கு இலட்சம் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் சாமானியம் படத்தை தொடர்ந்து வெளியான ஹிப் ஹாப் ஆதியின் பிடி சார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் முதல் நாளில் 70 லட்சம், இரண்டாவது நாளில் 1.13 கோடி, மூன்றாவது நாளில் 2.39 கோடி வசூல் செய்து செய்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

Advertisement