ராமராஜன் சுமத்திய குற்றச்சாட்டுக்கு சாமானியன் படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் சாமானியன் படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கே எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜனை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விட்டார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு படம் வரவேற்பு பெறவில்லை. மேலும், இந்தப் படத்தினுடைய புரோமோஷன் பணியின் போது நடிகர் ராமராஜன், சாமானியன் படத்திற்கு தேவையான எல்லா விஷயத்தையும் செய்து படத்தின் ஆபரேஷனை சக்சஸ் ஆக முடித்து கொடுத்து ஒரு குழந்தையாக படத்தை வெளியிட்டோம். ஆனால், வெளியே வந்த குழந்தையை தயாரிப்பாளர் கொன்றுவிட்டார்.

Advertisement

ராமராஜன் பேட்டி:

படத்திற்கு அவர் எந்த விளம்பரமும் செய்யவில்லை. இப்படி இருக்கும்போது படம் எப்படி ஓடும். பேப்பர், டிவி என்று எதிலுமே அவர் விளம்பரம் கொடுக்கவில்லை. இதையெல்லாம் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்தார்கள் என்றால் அது ராமராஜனுக்காக தான். இது என்னுடைய 46-வது படம். ஒன்றரை வருடமாக இந்த படம் வெளியாக பிரச்சனை இருந்தது. அதோடு எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியமும் அவர் தரவில்லை. இந்த படம் மிகப்பெரிய அளவில் போக வேண்டியது. ஆனால், தயாரிப்பாளர் சரியாக அதை விளம்பரப்படுத்தவில்லை.

தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு:

அதனால் தான் படம் வெற்றி பெறவில்லை என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான மதியழகன், ராமராஜன் சார் ரொம்ப நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர். எந்த விதத்திலும் அவரை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அவர் மேல் எனக்கு எந்த வெறுப்பும், கோபமும் கிடையாது. படம் வெளியான பிறகு நடிகர்கள் எல்லோருமே தியேட்டருக்கு சென்று விசிட் பண்ணுவார்கள். சாமானியன் படம் வெளியாகி 20 நாள் கடந்து விட்டது. 19 ஆவது நாள் தான் ராமராஜன் சார் தியேட்டருக்கு போய் பார்த்தார். ஜெயிலர் படத்துக்கு கூட 19 ஆவது நாளில் கூட்டம் இருக்காது.

Advertisement

தயாரிப்பாளர் மதியழகன் பேட்டி:

ஓடிடி ஆதிக்கம் அதிகமானதால் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு வாரம் தான் ஓடும். சாமானியன் படம் ரிலீசான உடனே ராமராஜன் சாரிடம் வெள்ளி, சனி, ஞாயிறு தியேட்டருக்கு விசிட் போங்க என்று சொன்னேன். அவர், இல்ல பொறுமையா போறேன் என்று சொன்னார். அதே மாதிரி இப்போ பொறுமையா போயிருக்கிறார். 19-வது நாளில் தியேட்டர் விசிட் செய்தால் எப்படி கூட்டம் வரும்? இது ராமராஜன் சார் தப்பு கிடையாது. அவர் ரசிகர்கள் தான் விளம்பரம் இல்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் 80கிட்ஸ் கூட கிடையாது, 70s கிட்ஸ். இது டிஜிட்டல் யுகம். ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கம்பேக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து படம் நடிப்பது என்பது வேறு, கம்பேக் கொடுப்பது வேறு.

Advertisement

ராமராஜன் குறித்து சொன்னது:

வெற்றி தோல்வியை 2கே கிட்ஸ் தான் நிர்ணயம் பண்ணுகிறார்கள். எவ்வளவோ பிரச்சினையை சமாளித்து படத்தை வெளியிட்டோம். அதோட படத்துக்கு விளம்பரம் இல்லை என்று ராமராஜன் சார் சொல்வது தவறான தகவல். புரமோஷனுக்காக இதுவரை 75 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அதற்கான எல்லா ஆதாரமும் இருக்கு. அவருக்கு எந்த சம்பள பாக்கியம் வைக்கவில்லை. அதற்கான ஆதரவும் இருக்கு. ராமராஜன் சார் சொல்வது எல்லாமே தவறான குற்றச்சாட்டு. அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க எங்களிடம் போதுமான பண வசதி கிடையாது. ஒரு மாசம் விளம்பரம் கொடுக்க நிறைய பிரஸ் மீட் வைத்தோம். இப்போது வரை படம் 10 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. விளம்பரம் பண்ணாமல் எப்படி தியேட்டரில் படம் ஓடும். இன்னைக்கு மக்களுடைய ரசனை மாறிவிட்டது. அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement