நான் தாய் வயித்துல பிறக்கல..பேய் வயித்துல பிறந்தேன்..! சாமி-2 டிரெய்லர்

0
1636
saami-2

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி-2 படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. 2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சாமி. விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது.

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் சாமி-2 படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி அறிவித்திருந்தார். அதன் படி இதற்கான சூட்டிங் வேலைகளும் மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன. அவ்வப்போது இப்படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இந்தப் படத்தின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.

இந்நிலையில் இன்று சாமி-2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட சாமி படத்தில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலும் நடிகர் விக்ரம் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஹரி படம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே நிறைந்து விறுவிறுப்பாக டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சாமி-2 படத்தின் டிரெய்லர் விக்ரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டிரெய்லரை பார்த்துள்ளனர்.