ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் சாணி காயிதம் . இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ், கண்ணா ரவி, லிஸ்டில் ஆண்டனி, வினோத் முன்னா உட்பட பலர் நடிக்க பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். செகவன் ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாணி காகிதம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் அதே பழிவாங்கும் கதை தான் இந்த படத்தின் கதையும். படத்தின் கதை 1979ல் நடந்திருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது. கதை பரதேசபட்டினம் என்ற ஊரில் நடக்கிறது. வழக்கமான ஜாதி பிரச்சனை தான். மேல் ஜாதியை சேர்ந்த ரைஸ் மில் முதலாளி தவறாக பேசியதற்கு அங்கு வேலை செய்யும் கீழ் ஜாதியை சேர்ந்தவர் தட்டிக்கேட்கிறார். இதனால் பிரச்சினை ஏற்படுகிறது. மீண்டும் கீழ் ஜாதியை சேர்ந்தவர் மன்னிப்பு கேட்டு வேலையில் சேர முயற்சிக்கிறார். அப்போது மேல் ஜாதி முதலாளி அவருடைய மனைவியை பற்றி தவறாகப் பேசுகிறார்.
படத்தின் கதை:
இதனால் ஆத்திரம் அடைந்த வேலை செய்பவர் முதலாளி கூட்டத்தை அவமதித்து வருகிறார். இதற்கு பழி வாங்குவதற்காக கீழ்ஜாதி தொழிலாளியின் மனைவி, போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் பொன்னியை மேல்ஜாதி கும்பல் கொடூரமாக தாக்கி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அதோடு பொன்னியின் கணவர் மற்றும் பெண் குழந்தை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் குடிசைக்கு தீ வைத்து விடுகிறார்கள். தனது குடும்பத்தை அழித்து தன்னையும் நாசம் செய்த கும்பலை பொன்னி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
கீர்த்தி சுரேஷ் நடிப்பு:
இந்த படத்தில் பொன்னி கதாபாத்திரத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். வழக்கம்போல் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அதிலும் பழிவாங்கும் காட்சிகளில் அவர் நடித்திருக்கும் நடிப்பு ஆஸ்கர் அவார்டு மிஞ்சும் அளவிற்கு உள்ளது. செல்வராகவனும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்து இருக்கிறார். ஆங்காங்கே செல்வராகவனின் டயலாக்கில் நக்கல் லேசாக எட்டிப் பார்த்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் மகளாக நடித்துள்ள சிறுமி செம க்யூட்டாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிஜிஎம் இசை கலக்கியிருக்கிறது.
செல்வராகவன்- கீர்த்தி சுரேஷ் ரோல்:
செல்வராகவனும் கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கை. சிறுவயதிலிருந்து பகையாளி போல் இருக்கிறார்கள். பின் திடீரென்று செல்வராகவனுடன் ஒன்றாக சேர்ந்து கெட்டவர்களை பழிவாங்குகிறார் கீர்த்தி. இது பயங்கர லாஜிக் குறைபாடு என்று சொல்லலாம். அதேபோல் கீர்த்தி சுரேசை பழிவாங்க தூண்டுவதற்காக செல்வராகவன் சொல்லும் கதையும் தேவையில்லை என்று கூறப்படுகிறது. வழக்கம்போல ஆங்காங்கே சம்பவங்களைக் காண்பித்து தலைசுற்ற வைத்திருக்கிறார் இயக்குனர். பின் எல்லா சம்பவங்களையும் ஒன்றாக இணைத்து கிளைமாக்ஸில் காண்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் என்ன நடக்கிறது? எதற்கு கொலை செய்கிறார்கள்? என்று புரியாமலேயே கதை செல்கிறது.
படம் பற்றிய தகவல்:
அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் யார்? அவருக்கும் கீர்த்தி சுரேஷ் இருக்கும் தொடர்பு என்ன என்பதை குட்டி பிளாக்கில் முடித்துவிடுகிறார்கள். தனக்கு கொடுமை செய்தவர்களை பழி வாங்குவது தான் இந்த படத்தின் கதை. அதை ரொம்பவே கொடூரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க ரத்தம் ரண கொடூரமாக இருக்கிறது. படம் முக்கால்வாசி வரை கத்திகுத்து தான் சென்று கொண்டிருக்கின்றது. கடைசியில் தான் துப்பாக்கி சத்தம் கேட்கிறது. சொல்லப்போனால் முதல் பாதி கொடுமையாக செல்கிறது, இரண்டாம் பாதி கொடூரமாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் செல்வராகவன் இணைந்து நடித்து இருப்பதால் ஆரம்பம் முதலே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமான படம் இது. ஆனால், அவர் இரண்டாவதாக நடித்த பீஸ்டீ படம் முன்பாக ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால், ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் என்று சொல்லலாம். இதுக்கு தானா டிரெய்லரில் இவ்வளவு பில்டப்பு? என்று ரசிகர்கள் என கேட்கும் அளவிற்கு உள்ளது. படம் முழுவதையும் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்க இருக்கின்றனர். கடலோரத்தில் வாழ்பவர்களுக்கு ரைஸ்மில் வேலையை விட்டால் வேறு வேலையே இல்லை என்பது போல மன்னிப்பு கேட்டு வேலைபார்க்க சொல்லி கணவரிடம் கீர்த்தி சுரேஷ் செல்வது கொஞ்சம் ஓவராக உள்ளது.
படம் குறித்து ரசிகர்கள் விமர்சனம்:
ட்ரைலரில் வந்த சில காட்சிகள் படத்தில் இல்லை என்று சொல்லலாம். படம் முழுக்கவே பழிவாங்குவதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. பழிவாங்கும் கதை என்று சொல்லி ரசிகர்களை பழிவாங்கி விட்டார் என்றே சொல்லலாம். சீவலப்பேரி பாண்டி நெப்போலியன் ரேஞ்சுக்கு முதுகில் அருவாளை சொருகி மிரட்டி இருப்பது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் பழி வாங்குவதை சாதாரணமாக காட்ட முயற்சி செய்திருக்கலாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு படம் ரொம்ப சுமார் தான். அதுவும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்து இருக்கிறது.
பிளஸ்:
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க பழிவாங்கும் கதை.
மேல்ஜாதி கீழ்ஜாதி குறித்து காண்பித்திருக்கிறார் இயக்குனர்.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
பிற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
மைனஸ்:
பழி வாங்குவதை தவிர வேறு ஒன்றுமே இல்லை.
ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்.
சில இடங்களில் வரும் காட்சிகள் செயற்கையாக இருக்கிறது.
எளிமையான காட்சியைக் கூட ரொம்ப ஓவராக காண்பித்திருக்கிறார்கள்.
பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான்.
மொத்தத்தில் சாணி காயிதம்- கரைந்து விட்டது ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை.