விஜய்யை வைத்து படம் எடுக்க மறுத்த பிரபல இயக்குனர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் விஜய்யை வைத்து படம் எடுக்க மறுத்த பிரபல இயக்குனர்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சினிமாவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பும் முயற்சியும் தான். ஆரம்ப காலத்தில் விஜய் உடைய நிறத்தையும் முகத்தையும் வைத்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். பத்திரிக்கையின் கூட ஏராளமான விமர்சனங்கள் வந்திருந்தது. ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜய் தன்னுடைய உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.

இதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தவர் அவருடைய தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான்.
மேலும், விஜய் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறியதற்கு எஸ் எஸ் சந்திரசேகர் வேண்டாம் என்று கூறினார். பின் எப்படியோ போராடி விஜய் நடிக்க சம்மதித்தார். பின் அவரே விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு என்ற படத்தை எடுத்தார். முதல் படத்திலேயே விஜய் நடிப்பை பார்த்து எஸ் ஏ சந்திரசேகர் மிரண்டு போய்விட்டார். அதனை தொடர்ந்து இவர் மூன்று படங்களை இயக்கியிருந்தார்.

Advertisement

அதற்குப் பிறகுதான் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை பெரிய இயக்குனர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதுதான் அவர் பாரதிராஜாவை சந்தித்தார். ஆனால், பாரதிராஜா நீயே ஒரு பெரிய இயக்குனர் என்கிட்ட எதுக்கு கொண்டுவர என்று சொல்லி சந்திரசேகரை திருப்பி அனுப்பி விட்டார். அதன் பிறகு இயக்குனர் கௌதம் மேனனிடம் விஜயின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு எஸ் ஏ சி சென்றார். ஆனால், அவரும் விஜய் வைத்து படம் எடுக்க தயங்கினாராம்.

Advertisement

அதற்கு பின் எப்படியே விஜய் போராடி இந்த நிலைமைக்கு உயர்ந்து இருக்கிறார். இந்நிலையில் இந்நிலையில் கரு மேகங்கள் கலைகின்ற படத்தின் படை இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய் குறித்து கூறியிருந்தது, ஆரம்பத்தில் நல்ல இயக்குனர்கள் எல்லாம் விஜயை பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டார்கள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். என்னிடம் வந்ததால் தான் விஜய் ஒரு கமர்சியல் ஹீரோவாக முடிந்தது என்று கூறி இருக்கிறார்.

Advertisement