‘அந்த பையன்’ – 83 படத்தில் தன்னை நினைவுபடுத்தும் சிறுவன் குறித்து சச்சின் சொன்ன கருத்து.

0
472
sachin
- Advertisement -

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அதே போல அசாருதீன், சச்சின், தோனி என்று பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் 1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற தருணத்தை கருவாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 83. இந்த படத்தினை கபீர் கான் இயக்கியிருக்கிறார். பிரபல பாலிவுட் ஹீரோவான ரன்வீர் சிங் இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அதேபோன்று தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தீபிகா படுகோன், பங்கட் திரிபாதி, நீனா குப்தா, மொஹீந்தர் அமர்நாத், போமான் இரானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு அஸீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்திற்கு பின்னணி இசை ஜூலியஸ் பாக்கியம் இசையமைத்து உள்ளார்.

- Advertisement -

83 உலக கோப்பையை நினைவுபடுத்திய படம் :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்வின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ’83’ படம் உருவாகியிருந்தது. இந்திய அணி 1983 ஆம் ஆண்டில் இந்திய தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலக கோப்பையை வென்றது. அந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் 83. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கும் இந்த உலக கோப்பையின் வெற்றி ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு :

மேலும், கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. டோனி பெற்ற உலக கோப்பை பலருக்கும் தெரியும். ஆனால், கபில்தேவ் கண்ட முதல் வெற்றி பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த சாதனையை மீண்டும் ரசிகர் கண்முன் கொண்டு வர இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

படத்தில் வந்த சிறு வயது சச்சின் :

வரலாற்று நினைவுகளை தத்ரூபமாக காட்டி இருந்ததால் இந்த படத்துக்கு பாராட்டுகள் குவிந்து இருந்தது. மேலும், இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறுவனாக கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து மகிழ்வதாக காட்டப்பட்டிருக்கும். இந்நிலையில் 83 திரைப்படம் குறித்து சச்சின் அவர்கள் டுவிட்டரில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ரன்வீர் சிங்கின் 83 வது படத்தில் வரலாற்று தருணத்தை எல்லா கோணங்களிலும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

படம் குறித்தும் அந்த சிறுவன் குறித்தும் சச்சின் கருத்து :

முதன் முறையாக உலக கோப்பை வென்ற தருணத்தை கபில்தேவ் மீள் உருவாக்கம் செய்து இருக்கிறார். அந்த சிறுவனுக்கு இந்த வெற்றி தூண்டுகோலாக அமைந்து இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

Advertisement