2017 -ல் இந்த ஒரு பாடல் தான் கூகுளில் அதிக பிரபலமானது ! எந்த பாடல் தெரியுமா

0
2614

இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி என கிட்டத்தட்ட இந்த வருடம் மட்டும் 1000த்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இவற்றில் எல்லாம் சேர்த்து இந்தியாவில் மிக அதிகமாக தேடப்பட்ட பாடல் எது என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
India’s Most Searched Song Of the Year என அறிவிக்கப்பட்ட இதில் பாகுபலியின் ஹிந்தி வெர்சன் பாடலான ‘சாஹோரே பாகுபலி’ (பலே பலே பலே பாகுபலி) பாடல் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் பாகுபலி -2 . உலகம் முழுவதும் வெளியாகி ₹ 1500 கோடிக்கு மெல் வசூல் செய்தது. இந்த பாசத்தின் சாஹோரே பாகுபலி பாடல் தான் இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட பாடல் என அறிவிக்கப்பட்டள்ளது.

இந்த பாடலை இந்தியில் எழுதியவர் சிவசக்தி தத்தா, இசையமைத்தவர் கீரவாணி. இந்த பாடல் யூட்டியூபில் மட்டும் 8 கோடி வியூக்களை கடந்துள்ளது குறப்பிடத்தக்கது.