கிரிக்கெட் விளையாட்றவங்கள Footபால் ஆட சொன்னா எப்படி இருக்கும் – சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து புலம்பிய சாய் காயத்ரி.

0
815
saigayathri
- Advertisement -

சிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதிலும் இந்த தொடரில் அடுத்தடுத்து நடிகைகள் கர்ப்பமாகி வருவதை கேலி செய்து இந்த தொடரை வந்தியன் ஸ்டோர்ஸ் என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து நான் விலகி விட்டது உண்மைதான் இதற்கு மேலும் ஐஸ்வர்யா ராய் பாத்திரத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை இனிவரும் கதை எனக்கும் என்னுடைய தவிலுக்கும் ஏற்படுவதாக இல்லை இந்த பயணத்தில் என்னை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி மேலும் என்னுடைய முடிவை மதித்து ஏற்றுக் கொண்ட விஜய் டிவிக்கும் நன்றி

- Advertisement -

ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சீரியல் நடிகை வைஷாலி தணிகா தான் நடித்து வந்தார். ஆனால், அவர் நடித்த சில மாதங்களிலேயே அவர் மாற்றப்பட்டு தீபிகா என்பவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார். இவருக்கும் கண்ணனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இவரையும் திடீரென்று சீரியலில் இருந்து நீக்கி விட்டார்கள் தீபிகாவிற்கு அதிகமான முகப்பரு பிரச்சனை இருந்ததால் இந்த சீரியல் இருந்து அவர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.

சாய் காயத்ரி பேட்டி :

ஆனால் தற்போது சாய் காயத்ரி விலகிவிட்டதால் மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு தீபிகா திரும்ப இருக்கிறார். இந்த நிலையில் தான் இது குறித்து சாய் காயத்ரி பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அவர் பேசுகையில் “இந்த முடிவு நான் திடீரென எடுத்தது கிடையாது. இதற்காக ஒன்றரை வருடம் காத்திருந்தேன். தொடக்கத்தில் எனக்கு சொல்லிய கதை வேறு ஆனால் அந்த கதை 8-9 மாதங்களுக்கு பிறகு தான் வந்தது. ஆனால் அது என்னவென்று பார்வையாளர்கள் பார்ப்பதற்கு முன்னர் முடிந்து அடுத்த கதைக்கு செண்டு விட்டது.

-விளம்பரம்-

விலகிய காரணம் :

பின்னர் சரி நமக்காக கதை வரும் வரையில் காத்திருக்க வேண்டாம் என்று நம்முடைய வேலையை செய்து கொடுப்போம் என்று காத்திருந்தேன். பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவையும் குறை சொல்ல முடியாது. ஆனால் ஒருவர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் போது திடீரென அவரை பூஃட் பால் ஆட சொன்னாலே அவரை முடியாது,அல்லது என்னால் 100 சதவிகிதம் சரியாக செய்ய முடியாது என்று கூறுவார். அதே போல கதையில் சில மாற்றங்கள் ஏற்படும் போது அது கதாபாத்திரத்தேயே மாற்றுகிறது. ஒரு நடிகராக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பண்ணலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் நமக்கு திருப்தி வேண்டும்.

அதே போல என்னுடைய கதாபாத்திரத்திற்காக மட்டுமே அவர்கள் கதையாக மாற்றிவிட முடியாது. சீரியலில் ஓரு வாரத்திற்கான trp வைத்துதான் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். அதே போல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 7 முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இதனால் தான் என்னுடைய கதாபாத்திரம் மாறுவது என்னுடைய திரைவாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தும், அந்த கதாபாத்திரம் எனக்கானது கிடையாது என்ற எண்ணத்தில் தான் நான் சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று கூறினார் சாய் காயத்ரி

Advertisement