தங்கையை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் சாய் பல்லவி-பிறந்தநாளில் வெளியிட்ட குயூட் புகைப்படம்.

0
2373
sai-pallavi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

-விளம்பரம்-

இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்குஎன பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இவரின் ரவுடி பேபி பாடல் மூலம் உலகளவில் சாதனை படைத்தது. இருந்தாலும் இவருக்கு தமிழில் அந்தளவிற்கு பட வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தற்போது தெலுங்கு மொழி படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட நடிகை சாய் பல்லவி அவர்களுக்கு அழகு சாதன விளம்பரத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் தருவதாக கூறப்பட்டது. ஆனால், மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்க எனக்கு விரும்பவில்லை கூறி இருந்தார்.

Sai-Pallavi-sister

தற்போது நடிகை சாய் பல்லவி அவர்கள் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலை அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர். இதனை தொடர்ந்து இவர் நடிகர் ராணாவுடன் விரத பர்வதம் 1992 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வேணு உடுகுலா இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement