தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. அதுமட்டுமில்லாமல் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்கிறார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். மேலும், இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலம் ஆனார். மேலும், நடிகை சாய் பல்லவி அவர்கள் 2008-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்”என்ற திரைப்படத்தின் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
அதைத் தொடர்ந்து அவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்து. மேலும், தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் இவருக்கு தமிழில் அந்தளவிற்கு படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இதனை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும்,அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் நாக சவுரியா என்பவர் படப்பிடிப்பு தளத்தில் ஓவர் பந்தா பண்ணுகிறார் என்று கூறுகிறார். அதுமட்டும் இல்லாமல் சக பணியாளர்கள் மற்றும் சாய் பல்லவி உடனும் கோபமாக நடந்து கொள்கிறார் என்றும், இதனால் இவருடன் பணியாற்றுவது எரிச்சலாக இருக்கிறது என்றும் நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக பேசி உள்ளார். மேலும்,இந்த விஷயத்தை நடிகர் நானி அவர்களும் ஒப்புக் கொள்வதாக கூறி உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் நடிகை சாய் பல்லவி இப்படிப் பேசி இருப்பதைப் பார்த்தால், இவரே சினிமா வாழ்க்கைக்கு சூனியம் வைப்பது போல் இருப்பது என்றும் பல பேர் கூறி இருந்தார்கள். ஆனால், அப்படி இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது கூட நடிகை சாய் பல்லவி அவர்கள் விரத பர்வம் மற்றும் லவ் ஸ்டோரி என்ற இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக தகவல் வந்து உள்ளது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர்கள் சமீபத்தில் பெட்டி ஒன்று அளித்து உள்ளார்.
அதில் அவர் கூறியது, நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே எது நடந்தாலும் அது நன்மைக்கு தான் நடக்கிறது என்று ஈசியாக எடுத்துக் கொள்வேன். அந்த மாதிரி பழக்கத்துடன் தான் நான் வளர்ந்தேன். தற்போது அந்த பழக்கம் தான் எனக்கு சினிமா துறையில் பெரும் உதவியாக உள்ளது. நான் இன்னும் சினிமா துறையில் எத்தனை காலம் இருப்பேன் என எனக்கு தெரியாது. ஆனால், நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களிலும் புது மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் எனக்கு ஆசை என்று மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை பல்லவி.