தமிழில் எந்த நடிகையும் செய்ய தயங்கும் கதாப்பாத்திரத்தை செய்த காட்டிய சாய் பல்லவி !

0
1007
Sai-pallavi

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த களி என்ற படத்தில் நடித்தார், அந்த படமும் வசூல் சாதனை புரிந்தது.இந்த இருப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க ஆர்மபித்தார். 2017 இல் அவர் நடித்த பிடா படம் மாபெரும் வெற்றியடைந்தது, இதனால் அவருக்கு அங்கும் மார்க்கெட் கூடிவிட்டது.

karu

இந்நிலையில் இவர் எப்போது தமிழ் படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். அதை நிறைவேற்றும் விதமாக இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கிய “கரு” என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஸ்வரசியாமான தகவல் என்னவென்றால் நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் குழந்தைக்கு தாயக நடித்திருக்கிறார்.

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சாய் பல்லவி தனது முதல் தமிழ் படத்திலேயே தாயக நடித்துள்ளது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக நடிகைகள் யாரும் இது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இளம் நடிகையான சாய் பல்லவி எடுத்துள்ள இந்த முயற்சியயை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Karu-Movie

ஏற்கனவே கரு என்ற பெயரிடப்பட்ட இந்த படம் தற்போது “தியா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்க்கு காரணம் கடந்த பிப்ரவரி மாதம் ஜே.எஸ் ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் கரு என்ற தலைப்பை தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும் அதை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்கு தடை விதிக்குமாறும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் கரு படத்தின் தலைப்பை தியா என்று மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.